அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR உயர்வு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து அதுவரை 31% ஆக இருந்த டிஏ மற்றும் டிஆர் 3% உயர்த்தப்பட்டு, மார்ச் மாதம் முதல் 34% ஆக உயர்ந்தது.
மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு குறித்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 34% அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பணவீக்கத்தை சரிசெய்யும் பொருட்டு ஊழியர்கள் மாறும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதத்தை உயர்த்தி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.
மத்திய அரசு வழங்கபோகும் டிஏ மற்றும் டிஆர் உயர்வுக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் டிஏ உயர்வு குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தவறான தகவலை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பாளர் கண்டறிந்தார். பொதுவாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்களின் விகிதங்களை உயர்த்துவது குறித்த அறிவிப்பு இந்திய பிரதமர் தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். இந்த 2022ம் ஆண்டு ஜனவரி-1ம் தேதியன்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் உயர்வு குறித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் படிக்க | ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்யணுமா? இனி உங்கள் மொபைல் மூலமே செய்யலாம்!
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து அதுவரை 31% ஆக இருந்த டிஏ மற்றும் டிஆர் 3% உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் 34% ஆக உயர்ந்தது. இந்த திருத்தப்பட்ட டிஏ மற்றும் டிஆர் விகிதங்கள் 7வது ஊதியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.
மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ