8 ஆவது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கவுள்ளதா? ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் என்னவாக இருக்கும்? 8 ஆவது ஊதியக்குழு தொடர்பான சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ள ஊழியர்கள் ஆர்வமாக உள்ளனர். மத்திய அரசு தனது ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் மாற்றங்களைச் செய்ய பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை அமைக்கிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 ஆவது ஊதியக் குழுவின் உருவாக்கம்:


25 செப்டம்பர் 2013 அன்று, 7 ஆவது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆணையம் தனது பரிந்துரையை ஜூன் 2016 இல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இது ஜூலை 25, 2016 முதல் அறிவிப்பு மூலம் செயல்படுத்தப்பட்டது. புதிய ஊதிய விகிதத்தின் பலன் 2016 ஜனவரி 01 முதல் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


8 ஆவது ஊதியக் குழு அமலாக்கத் தேதி:


8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று பல்வேறு ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஜனவரி 01, 2026 முதல் நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டில் 8வது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய ஊழியர்கள் கருதுகின்றனர். 8 ஆவது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து மத்திய எண்டிஏ அரசு ஆலோசித்து வருவதாக சில காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. 


மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு, ஊதியத்தின் முழு கணக்கீடு இதோ 


அதிகாரப்பூர்வ அறிக்கை:


எனினும், மத்திய நிதித்துறை இணையமைச்சர், மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 8 ஆவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தினார். சம்பள கமிஷன் அமைக்கப்படும் என காத்திருந்த மத்திய ஊழியர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


7 ஆவது ஊதியக் குழுவில் கூறப்பட்டது என்ன? 


7 ஆவது ஊதியக் குழு, தனது பரிந்துரைகளில், எதிர்காலத்தில் ஊதியக் குழுவுக்குப் பதிலாக, பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை இணைத்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தது. ஊழியர்களின் பதவி உயர்வு அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த சூத்திரத்திற்கு Aykroyd formula என்று பெயரிடப்பட்டது. 


இந்த சூத்திரத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வின் கூறுகளை தீர்மானிக்க அரசு தீவிரமாக யோசித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்து வருகின்றன. 


பணியாளர் அமைப்பு மற்றும் நிபுணர்களின் கருத்து:


அரசின் நிதித்துறை அமைச்சரின் அறிக்கைக்குப் பிறகும், 8 ஆவது ஊதியக் குழு அமைப்பது குறித்து அரசு அறிவிக்கக்கூடும் என சில நிபுணர்கள் கருதுகின்றனர். 8 ஆவது ஊதியக்கமிஷன் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு தற்போது பரிசீலனையில் இல்லை என்று மட்டுமே தற்போதைய அரசாங்க அறிவிப்பிற்கு அர்த்தம் கொள்ள வேண்டும் என சிலர் கருதுகின்றனர். அதன் உருவாக்கம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படுமா என்பது குறித்து அரசிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. சில ஊழியர் அமைப்புகளும் நிபுணர்களும் இதை நேர்மறையான வழியில் எடுத்துக்கொள்கிறார்கள்.


7வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச ஊதியம்:


7வது ஊதியக் குழுவின் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஊழியர் அமைப்புகள் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 ஆல் பெருக்கி குறைந்தபட்ச ஊதியத்தை 26,000 ஆக அதிகரிக்க கோரி வருகின்றனர். 


குறைந்தபட்ச சம்பளத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு:


பழைய ஃபார்முலாவின் அடிப்படையில் கணக்கிட்டு, 8வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 முறை ஃபிட்மென்ட் பேக்டரை அரசு வைத்திருந்தால், புதிய குறைந்தபட்ச சம்பளம் 18,000 x 2.57 = 46,260 ஆக இருக்கும். எனினும், ஊழியர் அமைப்புகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 ஆக வைத்தால், ஊதியம் 18,000  x 3.68 = 66,240 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் காத்திருக்கும் டிரிபிள் ட்ரீட்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ