மளமளவென சரிந்த அதானி - அம்பானி சொத்துகள்..! இரண்டு பேருக்கும் எவ்வளவு இழப்பு தெரியுமா?
இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பு திடீரென சரிவைக் கண்டுள்ளது. இரண்டு பேரும் பல ஆயிரம் கோடிகளை ஒரேநாளில் இழந்துள்ளனர்.
இந்தியாவின் டாப் தொழிலதிபர்களான அதானி மற்றும் அம்பானி உலக செல்வந்தர்கள் பட்டியலில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இருவரில் அம்பானி டாப் 10-க்குள் இருந்தாலும், அதானியின் சொத்து மதிப்புகள் ஜெட் வேகத்தில் உயர்ந்து உலக செல்வந்தர்கள் பட்டியலில் டாப் 3 வரை முன்னேறினார். ஆனால் அது எல்லாம் ஜனவரி 24 ஆம் தேதி வரை மட்டுமே. அதன்பிறகு அவருடைய நிலைமை தலைகீழானது. அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க், அதானி குழுமத்தின் பங்கு முதலீடு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்கு முதலீட்டில் மேற்கொண்டு வரும் முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
மேலும் படிக்க | அதானிக்கு மாஸ்டர் பிளான் போட்டு கொடுக்கும் வினோத் அதானி யார்?
அவ்வளவு தான்...அதானி பங்கு நிறுவனங்கள் அனைத்தும் இந்த அறிக்கைக்குப் பிறகு மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்த அதானி குழுமத்துக்கு முன்னணி நிறுவனங்கள் கடன் கொடுப்பதையும் நிறுத்தியதுடன், அதனை வெளிப்படையாகவும் அறிவித்துவிட்டன. அதனால் மேலும் அவரின் பங்குகள் வீழ்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கியது. உடனே இதனை சரிகட்ட பல வழிகளிலும் காய்களை நகர்த்த தொடங்கினார் அதானி. இதனால் கடந்த சில நாட்களாக ஏறு முகத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று மீண்டும் சரிவுப்பாதைக்கு திரும்பியுள்ளது. அதாவது, ஒரே நாளில் சுமார் 1.7 பில்லியன் டாலர் அளவுக்கு அதானியின் சொத்து மதிப்பு சரிவைக் கண்டுள்ளது.
இது அவரின் நிகர சொத்து மதிப்பில் சுமார் 3.66 சதவீதம் ஆகும். உலக செல்வந்தர்கள் பட்டியலில் 30 இடங்களுக்கு மேல் தள்ளப்பட்ட அவர், மார்க்கெட்டில் பங்குகள் சரிவில் இருந்து மீளத் தொடங்கியதில் இருந்து 20வது இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். இந்த சரிவு மூலம் மீண்டும் 25 வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதேபோல் மற்றொரு செல்வந்தரான முகேஷ் அம்பானி உலக செல்வந்தர்கள் பட்டியலில் 9வது இடத்தில் இருந்தார். ஆனால் அவருடைய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்ததால் டாப் 10 -பட்டியலில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
மேலும் படிக்க | லித்தியம் மார்க்கெட்டை கைப்பற்ற சீனா ரகசிய பிளான்..! 2025-ல் உலகமே கையேந்தும்
மேலும் படிக்க | மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயம் இந்த வேலைகளை முடிச்சுருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ