மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயம் இந்த வேலைகளை முடிச்சுருங்க!

மார்ச் 31, 2023க்குள் மக்கள் தங்கள் பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கும் செயல்முறையை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 14, 2023, 12:53 PM IST
  • பான்-ஆதார் இணைக்கவிட்டால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்துவிடும்.
  • பான்-ஆதார் இணைக்க ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டும்.
  • பிரிவு 80C அல்லது 80D-ன் கீழ் பலன்களைப் பெறலாம்.
மார்ச் 31ம் தேதிக்குள் கட்டாயம் இந்த வேலைகளை முடிச்சுருங்க!  title=

2022-2023ம் நிதியாண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அபராதங்களைத் தவிர்க்கவும், உங்கள் வருமானம் மற்றும் வணிகம் தொடர்பான முக்கியமான காலக்கெடுவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமும் இதுதான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.  மார்ச் 31, 2023க்குள் மக்கள் தங்கள் பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கும் செயல்முறையை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது.  இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்கள் தங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  காலக்கெடுவுக்குள் இந்த செயல்முறையை செய்யத் தவறுபவர்கள் அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு! எப்போது இருந்து தெரியுமா?

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) போர்ட்டலில் ஐடிஎன்எஸ் 280 என்ற சலான் எண்ணின் கீழ் 0021 (நிறுவனங்களைத் தவிர வருமான வரி மற்றவை) மற்றும் மைனர் ஹெட் 500 உடன் செலுத்துவதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்.  பான் மற்றும் ஆதார் இணைக்கப்படும் வரை வருமான வரித் துறை வருமானத்தை ரிட்டர்ன் செய்யும் செயலை செய்யாது.  

1) தகவல் தொழில்நுட்பத் துறையின்படி, முன்கூட்டிய வரி செலுத்துதலின் இறுதி தவணை மார்ச் 15, 2023 ஆகும்.  முன்கூட்டிய வரி தவணை செலுத்துவதற்கான கடைசி நாள் வங்கிகள் மூடப்பட்ட நாளாக இருந்தால், அடுத்த வேலை நாளில் வரி செலுத்துவோர் வரியை செலுத்த வேண்டும்.  அப்படியும்  வரி செலுத்தத் தவறினால், வரி செலுத்துபவருக்கு 1961-ன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 234B மற்றும் 243C-ன் கீழ் அபராதங்கள் விதிக்கப்படும்.

2) 2022-2023 நிதியாண்டுக்கான வரி-சேமிப்பு முதலீடுகளுக்கான காலக்கெடு மார்ச் 31, 2023 ஆகும், இது உங்களுக்கு வரியை குறித்து அதிக பணத்தைச் சேமிக்க உதவுகிறது.  வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C அல்லது 80D இன் கீழ் பலன்களைப் பெற நீங்கள் எந்த முதலீடும் செய்யவில்லை என்றால், மார்ச் 31-ஆம் தேதிக்குள் அதைச் செய்ய வேண்டும்.  நடப்பு நிதியாண்டில் செய்யப்படும் முதலீடுகள் வரி விலக்குகளுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும்.

3) பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (பிஎம்விவஒய்) என்பது மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு காப்பீடு ஓய்வூதியத் திட்டமாகும்.  ஓய்வூதியதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இந்த ஓய்வூதியத் திட்டத்தை வழங்குகிறது.  இந்த திட்டத்தில் ஒரு மூத்த குடிமகன் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம், இது மார்ச் 31, 2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.  10 ஆண்டு முதிர்வு திட்டத்தை கொண்ட இந்த 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.  இந்த திட்டத்தில்  ஓய்வூதியத்தை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என விருப்பப்படி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | கார் கடன் வாங்க போறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கவனீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News