அதானிக்கு மாஸ்டர் பிளான் போட்டு கொடுக்கும் வினோத் அதானி யார்?

அதானி சிக்கலில் இருக்கும் நிலையில், அவரது மூத்த சகோதரர் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். அவர் என்ன செய்கிறார்? அவருக்கும் அதானி குழும பங்குகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 18, 2023, 10:59 AM IST
அதானிக்கு மாஸ்டர் பிளான் போட்டு கொடுக்கும் வினோத் அதானி யார்?  title=

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு ஏற்பட்ட சரிவில் இருந்து அதானியால் இன்னும் மீள முடியவில்லை. நாள்தோறும் புதுப்புது பிரச்சனைகளும், நெருக்கடிகளும் தலைதூக்கிக் கொண்டே இருக்கின்றன. இத்தனை வருட காலம் அறிந்து வைத்திருக்கும் அத்தனை பிஸ்னஸ் அஸ்திரங்களையும் இப்போதைய நெருக்கடியில் இருந்து மீள ஒவ்வொன்றாக வீசிக் கொண்டே இருக்கிறார் அதானி. ஆனால், அவையனைத்தும் உடனடியாக அதானியின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரியவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

வினோத் அதானி யார்?

இப்படியான சூழலில் அதானிக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் வினோத் அதானி. இவர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர். துபாயில் இருந்தாலும், அவர் சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். 1976 ஆம் ஆண்டு மும்பை அருகே ஜவுளி ஆலையை நிறுவி, அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்ததாகவும் ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுகிறது. பின்னர் அவரது பணி 1994-ல் துபாய் சென்று செட்டிலாகியிருக்கிறார். 

மேலும் படிக்க | Chat GPT பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி? ChatGPT-யே கொடுக்கும் பலே ஐடியா..!

வினோத் அதானி பிளான்

வினோத் அதானி வர்த்தகத்தில் தலைசிறந்தவர் என்று கூறப்படுகிறது.  சர்க்கரை எண்ணெய் மற்றும் தாமிரம் உள்ளிட்ட முக்கிய பொருட்களில் அவருக்கு கணிசமான வர்த்தக அனுபவம் இருக்கிறது. அத்துடன் அதானி குழுமத்திலும் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. அவரது நிகர மதிப்பு சுமார் $1.3 பில்லியன் ஆகும். அவர் அதானிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளில் இருந்து மீட்க வெளிநாடுகளில் தன்னுடைய ராஜதந்திரங்களை பயன்படுத்த தொடங்கயிருக்கிறார். 

அதன் ஒருபகுதியாக சமீபத்தில், அதானி குழுமத்துக்கு, வினோத் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் கீழ் உள்ள அம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசி லிமிடெட் நிறுவனங்களை கொடுத்துள்ளார். இப்போது இந்த இரண்டு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதானி குழுமத்திற்கு சர்வதேச சந்தையில் இருந்து பணம் திரட்டவும், பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த வகையில் வினோத் அதானி உதவிக் கொண்டிருக்கிறார். 

சர்ச்சைகளில் வினோத் அதானி

கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சர்ச்சைகளுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 2016-ம் ஆண்டு வெளியான பனாமா பேப்பர் லீக்கில் இவரது பெயர் இருந்தது. இந்த அறிக்கையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் நிதித் தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதில், 1994 ஜனவரியில், பஹாமாஸில் ஒரு நிறுவனத்தை வினோத் அதானி உருவாக்கினார் என்று கூறப்பட்டது. நிறுவனம் உருவாக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நிறுவனத்தின் ஆவணங்களில் அவர் தனது பெயரை 'வினோத் சாந்திலால் அதானி' என்பதில் இருந்து 'வினோத் சாந்திலால் ஷா' என்று மாற்றினார் என தெரிவிக்கப்பட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் வினோத் அதானி
 
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையில் வினோத் அதானியின் பெயர் 151 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் எந்த நிறுவனத்திலும் அவர் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், அவருக்கான நெருங்கிய தொடர்புகளை விளக்கமாக கூறப்பட்டுள்ளது.  வினோத் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மொரிஷியஸில் டஜன் கணக்கான நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். உண்மையில் அவை கார்ப்பரேட் இருப்பு இல்லை.

சைப்ரஸ், சிங்கப்பூர், கரீபியன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இதே போன்ற சில நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் அதானி குழுமத்துடன் சில சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக வினோத் அதானி உதவியிருக்கிறார் என கூறும் ஹிண்டன்பெர்க் அறிக்கை, அதானி நிறுவனங்களின் பங்கு விலையை உயர்த்தியதிலும் அவருக்கு பங்கு உண்டு என தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | மளமளவென சரிந்த அதானி - அம்பானி சொத்துகள்..! இரண்டு பேருக்கும் எவ்வளவு இழப்பு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News