Toll Plaza:நாட்டின் சாலைகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி (Union Minister of Road Transport and Highways Nitin Gadkari) மக்களவையில் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டண வசூலுக்காக புதிய ஜி.பி.எஸ் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு யாரும் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.


அம்ரோஹாவைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., குன்வார் டேனிஷ் அலி, கட்முக்தேஸ்வர் அருகே சாலையில் நகராட்சி எல்லையில் ஒரு சுங்க சாவடி அமைத்திருப்பது குறித்த பிரச்சினை எழுப்பினார். இது குறித்து நிதின் கட்கரி ( Nitin Gadkari) கூறுகையில், இந்த முந்தைய அரசு காலத்தில், நகரத்திற்கு அருகில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன, இது சட்ட விரோதமானது. இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற முடிவு செய்துள்ளோம். ஒரு வருடத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அரசு அகற்றும் என்று அவர் கூறினார்.


ALSO READ | ஆன்லைன் மோசடிக்கு வங்கிகள் பொறுப்பல்ல: நுகர்வோர் நீதிமன்றம்


சுங்கச்சாவடிகள் (Toll Plaza) அகற்றப்பட்டதும், ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சாலையின் நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் இடங்களில் கேமராக்கள் இருக்கும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாலையில் நுழைந்ததும், வெளியேறும் இடத்திலும், இரு இடங்களிலும் உங்கள் படம் கேமராவுடன் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது, பயணிகள் வாகனத்தை எங்கும் நிறுத்தத் தேவையில்லை. இப்போது புதிய வாகனங்களில் GPS அமைப்பு வருகிறது என்று நிதின் கட்கரி அறிவித்தார். பழைய வாகனங்களில் GPS அமைப்பை இலவசமாக நிறுவுவோம் என அவர் கூறினார்.


பாஸ்டேக் (FASTag) முறை கட்டாயமாக்கப்பட்ட பின்னர், மோசடிகள் முற்றிலும்  ஒழிந்து இருப்பதாக நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இப்போது, ​​கோவிட் நெருக்கடி காலத்தில், சுக்க சாவடி கட்டண வசூல் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றார். 


ALSO READ | கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR