FD மற்றும் சேமிக்கு கணக்குகளின் வட்டி விகிதங்களை உயர்த்திய வங்கி!
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 2.50 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான ஆக்சிஸ் வங்கி, பிக்சட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி இருக்கிறது. ஜூன் 13, 2022 அன்று ஆக்சிஸ் வங்கி 2 கோடிக்கும் குறைவாக பிக்சட் டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தைத் திருத்தியது. அதேபோல ஜூன் 1, 2022 அன்று வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தையும் வங்கி திருத்தியது. இத்தகைய மாற்றங்களை தொடர்ந்து, தற்போது வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 2.50 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை வட்டி விகிதமும், சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு 3 சதவீதம் முதல் 3.50 சதவீதம் வரை வட்டி விகிதமும் வழங்கவுள்ளது.
மேலும் படிக்க | LIC பங்குகள் தொடர் சரிவு : வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்!
வங்கி தற்போது 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 2.50 சதவீத வட்டி விகிதத்தையும், 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. 3 முதல் 6 மாதங்களில் செலுத்த வேண்டிய டெபாசிட்டுகள் இப்போது 3.50 சதவீத வட்டி விகிதத்தைப் பெறும், அதே சமயம் 6 முதல் 9 மாதங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.40 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். ஆக்சிஸ் வங்கி தற்போது 9 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4.75 சதவீத வட்டி விகிதத்தையும், 1 ஆண்டு முதல் 15 மாதங்களில் முதிர்வு செய்யும் டெபாசிட்டுகளுக்கு 5.25 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. வங்கி தற்போது 15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.30 சதவீத வட்டியை வழங்குகிறது.
அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைகள் இப்போது 5.60 சதவீதமும், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்கள் 5.75 சதவீதமும் திரும்பப் பெறும். மூத்த குடிமக்களுக்கு 2.50 சதவீதம் முதல் 6 வரையிலான வட்டி விகிதங்கள் கிடைக்கும். வங்கி இப்போது 3.00 சதவீத வட்டி விகிதத்தை ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு கணக்கு நிலுவைகளுக்கு வழங்கும் மற்றும் சேமிப்பு கணக்குகளில் ரூ.800 கோடிக்கு குறைவான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 3.50 சதவீத வட்டி விகிதமும் கிடைக்கும், இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆக்சிஸ் வங்கி அதன் அதிகாரபூர்வ தளத்தில் வட்டி விகிதங்கள் குறித்த கட்டமைப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) இன்று 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. எஸ்பிஐ 15 முதல் 20 அடிப்படையில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. பிஎன்பி 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தது. ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியதில் இருந்து வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் அலுவலகத்தின் சூப்பர் ஹிட் முதலீட்டு திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR