LIC பங்குகள் தொடர் சரிவு : வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்!

எல்.ஐ.சி பங்குகள் சந்தையில் வர்த்தகமாக தொடங்கிய நாளில் இருந்து தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பங்குகளை வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 13, 2022, 12:44 PM IST
  • எல்.ஐ.சி பங்குகளை வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்!
  • பங்குகளின் விலை ஏன் விழுகிறது!?
  • இப்போது இந்த பங்குகளை வாங்கலாமா?
LIC பங்குகள் தொடர் சரிவு : வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்!

இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓவான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பங்குகள், ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக்-இன் முடிவடையும் நாளான திங்கட்கிழமை வர்த்தகத்தில் நான்கு சதவீதம் வரை சரிந்திருக்கிறது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையான ரூ.681.70ஐ தொட்டது. திங்கட்கிழமை காலை 10 மணியளவில், பங்குகள் கிட்டத்தட்ட மூன்று சதவீத தள்ளுபடியுடன் ஒரு பங்கின் விலை ரூ.689.45 ஆக இருந்தது.

ஆங்கர் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் 59.3 மில்லியன் பங்குகளை ஒரு பங்கு 949 ரூபாய்க்கு வாங்கியிருந்தனர். சிங்கப்பூர் அரசு, எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை ஐபிஓவில் பங்கு பெற்ற முக்கிய முதலீட்டாளர்கள் ஆகும்.

ஒரு மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி மதிப்பிழந்துள்ளது

LIC பங்குகள் ஐபிஓ விலையான ரூ.949 இல் இருந்து இதுவரை சுமார் 28 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் பங்குகள் சுமார் 11% சரிந்துள்ளன. அது மட்டுமின்றி LIC நிறுவத்தின் சந்தை மதிப்பு அறிமுகமானதில் இருந்து 1.65 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துள்ளது. எல்ஐசி பங்குகள் மே 17 அன்று ரூ.6 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் பட்டியலிடப்பட்டன.

மேலும் படிக்க | Atal Pension Scheme: தினமும் ரூ.7 சேமித்து 60,000 ஓய்வூதியம் பெறலாம்; வரி விலக்கும் உண்டு

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் லிமிடெட் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா, பாரம்பரியமாக 30 நாள் ஆங்கர் முதலீட்டாளர்களின் லாக்-இன் காலத்திற்குப் பிறகு வர்த்தகத்தின் முதல் நாளில் செய்யப்பட்ட குறைந்த அளவு, தரமான பங்குகளுக்கு மேலும் எழுச்சிக்கு வலுவான ஆதரவாக செயல்படலாம் என்று கூறியுள்ளார். இந்தியாவின் மிகக் குறைவான ஆயுள் காப்பீட்டுச் சந்தை இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், அபரிமிதமான வளர்ச்சித் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற நிலையில் இருப்பதாகவும் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். "அடிப்படைகள் வலுவாக இருந்தால், குறைந்த விலையில் வாங்க இது ஒரு நல்ல நேரம்," என மீனா பரிந்துரைத்திருக்கிறார்.

"எல்ஐசியின் சந்தை-முன்னணி நிலை மற்றும் வசதியான மதிப்பீடுகளை நாங்கள் பாராட்டினாலும், சிறந்த வளர்ச்சி, லாபம் மற்றும் அதிக RoEV வாய்ப்புகள் உள்ள தனியார் துறை நிறுவனங்களை நாங்கள் விரும்புகிறோம்," என்று சில ப்ரோக்கர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் அலுவலகத்தின் சூப்பர் ஹிட் முதலீட்டு திட்டம்

 

எல்ஐசி பங்கு மந்தமான பட்டியல்

 

முன்னதாக, எல்ஐசி பங்குகள் மே 17 அன்று எக்ஸ்சேஞ்ச்களில் (என்எஸ்இ, பிஎஸ்இ) ஒரு மந்தமான அறிமுகத்தை சந்தித்தன, அதன் பின்னர் தொடர்ந்து சரிந்து வருகின்றன.

LICயின் பங்குகள் பிஎஸ்இயில் ரூ. 867.20க்கு பட்டியலிடப்பட்டுள்ளன, ஒரு பங்கின் வெளியீட்டு விலையான ரூ.949க்கு எதிராக 8.6 சதவீத தள்ளுபடியில் சந்தையை வந்தடைந்தது. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (என்எஸ்இ) பங்கு வெளியீட்டு விலைக்கு எதிராக 8 சதவீதம் உயர்ந்து ரூ.872க்கு அறிமுகமானது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News