Bank Holidays in April 2024: ஒவ்வொரு மாதமும் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) வங்கி விடுமுறை பட்டியலை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தின் ஆரம்ப நாட்களில் பல மாநிலங்களில் வங்கிகள் விடுமுறையாக இருந்தது, அந்தவகையில் தற்போது இன்று அதாவது ஏப்ரல் 17 ஆம் தேதி புதன்கிழமை, ராம நவமி பண்டிகையை (Ram Navami Bank Holiday) முன்னிட்டு நாட்டில் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ விடுமுறை காலண்டரின் படி, பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விடுமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது, எனவே ராம நவமி அன்று வங்கிகள் எங்கு மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டுமா? மேலும், ஏப்ரல் கடைசி தேதி வரை எந்த மாநிலத்தில் இன்னும் எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அப்படியானால் உடனடியாக இந்த கட்டுரையை சரிப்பார்க்கவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம நவமி தினத்தன்று இந்த மாநிலங்களில் இருக்கும் வங்கிகளுக்கு விடுமுறை அழிக்கப்பட்டுள்ளது:
ராஞ்சி - Ranchi
மும்பை - Mumbai
பாட்னா - Patna
சிம்லா - Shimla
போபால் - Bhopal
ஜெய்ப்பூர் - Jaipur
நாக்பூர் - Nagpur
பேலாபூர் - Belapur
கான்பூர் - Kanpur
லக்னோ - Lucknow
காங்டாக் - Gangtok
சண்டிகர் - Chandigarh
புவனேஸ்வர் - Bhubaneshwar
டேராடூன் - Dehradun
ஹைதராபாத் - Hyderabad
அகமதாபாத் - Ahmedabad


மேலும் படிக்க | EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோ


இந்நிலையில் இந்த மாநிலத்தில் இருக்கும் வங்கிகளில், பொதுமக்கள் காசோலை டெபாசிட் செய்யவோ, அல்லது டிராப்ட் வசதியை பெறவோ, அல்லது வங்கிக்கு நேரடியாக சென்று ஏதோணும் வேலையை செய்ய வேண்டும் என்றாலோ செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏப்ரல் மாதம் இன்னும் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்?


இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறை பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது எஞ்சியுள்ள நாட்களில் (April Month Holidays) வங்கி விடுமுறைகளின் முழுமையாம் விவரத்தை இங்கே சரிப்பார்க்கலாம்.


20 ஏப்ரல் 2024, வங்கி விடுமுறை: கரியா பூஜை பண்டிகைக்காக திரிபுராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holidays) அளிக்கப்பட்டுள்ளது.
21 ஏப்ரல் 2024, வங்கி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை (Sunday) காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
27 ஏப்ரல் 2024, வங்கி விடுமுறை: நான்காவது சனிக்கிழமை (Fourth Saturday) காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
28 ஏப்ரல் 2024, வங்கி விடுமுறை : ஞாயிற்றுக்கிழமை (Sunday) காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் பேப்பர் நாப்கின் பிஸினஸ்... முத்ரா கடனுதவியும் கிடைக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ