பணத்தை பன்மடங்காக்கும் FD... இரு மடங்காக பெருகியுள்ள மூத்த குடிமக்கள் முதலீடுகள்!

Senior Citizens FD: மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி முதலீடுகளுக்கான, வட்டியை வங்கிகள் அதிகம் வழங்குவதால், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2024, 10:36 AM IST
  • சாதாரண முதலீட்டாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி
  • ரிசர்வ் வங்கியின் முடிவால் அதிகரித்துள்ள FD வட்டி விகிதம்.
  • நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி கணிசமாக அதிகரித்துள்ளது.
பணத்தை பன்மடங்காக்கும் FD...  இரு மடங்காக பெருகியுள்ள மூத்த குடிமக்கள் முதலீடுகள்! title=

Senior Citizens FD: கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், வங்கிகளில் வைப்புத் தொகை முதலீடுகளும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் நிலையானதாக இருப்பதால், நிலையான வைப்புத்தொகைக்கான வட்டியும் கணிசமாக அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி முதலீடுகளுக்கான, வட்டியை வங்கிகள் அதிகம் வழங்குவதால், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன. அதோடு, சாதாரண வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி அதிகமாக வழங்கப்படுவதும் ஒரு முக்கிய காரணம்.

எஸ்பிஐ ரிசர்ச் ஈகோவ்ராப் வெளியிட்டுள்ள அறிக்கை

எஸ்பிஐ ரிசர்ச் ஈகோவ்ராப் (SBI Research Ecowrap) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் சுமார் 7.4 கோடி நிலையான வைப்பு  (Fixed Deposits) கணக்குகளை வைத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதில் உள்ள மொத்த முதலீடுகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி. 2019 நிதியாண்டில் மூத்த குடிமக்கள் செய்துள்ள முதலீடு ரூ.14 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 41 மில்லியன் கணக்குகள் என்ற அளவில் நிலையான வைப்பு கணக்குகள் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் கணக்குகளின் எண்ணிக்கை 81 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டிப்பாகியுள்ள மூத்த குடிமக்களின் வருமானம்

பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலையான வைப்பு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, வைப்புத் தொகையும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதிக வட்டி வருமானம் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளில் நிரந்தர வைப்புத் தொகை என்னும் எஃப்டி முதலீடுகள் (Investment Tips) மூலம் பணம் பண்மடங்காகியுள்ளது. அதாவது முதலீட்டு தொகை 143 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லட்சத்தை ஐந்தாண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் எவரேனும் முதலீடு செய்திருந்தால் இன்று அவருக்கு ரூ.2.43 லட்சம் கிடைத்திருக்கும். அதாவது ஐந்தாண்டுகளில் மூத்த குடிமக்களின் முதலீட்டு தொகை இரண்டு மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | பில்லியனர் ஆக ஆசை, ஆனால் வழி தெரியலையா? ‘இந்த’ சூப்பர் ஐடியாவை படிங்க..

சாதாரண முதலீட்டாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி 

மூத்த குடிமக்களுக்கு, நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி, பொது மக்களை விட 50 அடிப்படை புள்ளிகள் அதிகம். அதேசமயம் எஸ்பிஐ மற்றும் எச்டிஎஃப்சி போன்ற வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 75 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி வழங்கியுள்ளன. கூடுதலாக,  2222 நாட்களுக்கான எஸ்பிஐ க்ரீன் ருபி டெர்ம் டெபாசிட் (SBI Green Rupee Term Deposit) போன்ற திட்டங்கள் 100 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டியைவழங்குகின்றன.

ரிசர்வ் வங்கியின் முடிவால் அதிகரித்துள்ள FD வட்டி விகிதம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2024-25 நிதியாண்டிற்கான முதல் நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Committee - MPC) கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5% ஆக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஏழாவது முறையாக கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதல் விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தாலும், வாடிக்கையாளர்களை  ஈர்க்க, வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன.

மேலும் படிக்க | லட்சங்களில் வருமானம் தரும் பேப்பர் நாப்கின் பிஸினஸ்... முத்ரா கடனுதவியும் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News