Bank Locker Rules: வங்கி லாக்கர் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், தனிநபர்கள் எந்த வங்கியிலும் தங்களுக்கு தேவையான வங்கி லாக்கரைத் திறந்து கொள்ளலாம்.  அந்த குறிப்பிட்ட வங்கியில் உங்களுக்கு ஏற்கனவே வங்கி கணக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கும் வங்கி லாக்கருக்கும் தொடர்பு இல்லை.  அந்த வங்கியுடன் எந்த முன் தொடர்பும் இல்லாவிட்டாலும், நீங்கள் வங்கி லாக்கரை திறந்து கொள்ளலாம்.  நீங்கள் ஒரு வங்கியில் உங்களது மாத சம்பளத்தையும், மற்றொரு வங்கியில் சேமிப்பு தொகையை வைத்திருந்தாலும் நீங்கள் மூன்றாவதாக இன்னொரு வங்கியில் வங்கி லாக்கரை திறந்து கொள்ள விதிகள் அனுமதிக்கிறது நீங்கள் KYC செயல்முறையை முடித்த பிறகு வங்கி லாக்கரைப் பெற முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்... தபால் அலுவலகத்தின் சிறந்த 5 திட்டங்கள்


பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகள் என்னவென்றால் சில வங்கிகளில் லாக்கர்கள் எப்போதுமே கிடைக்காது, இதனால் பலரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2021 முதல் ஆர்பிஐ உத்தரவுப்படி ஒவ்வொரு வங்கிகளும் தங்களது வங்கியில் எவ்வளவு லாக்கர்கள் இருக்கிறது என்றும் புதிதாக லாக்கருக்கு விண்ணப்பித்தவரின் காத்திருப்புப் பட்டியலையும் பராமரிக்க வேண்டியும் உத்தரவு பிறப்பித்தது.  எனவே, நீங்கள் வங்கியில் புதிதாக லாக்கருக்கு விண்ணப்பிக்கும்போது, ​​அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பதிலளிக்க வேண்டும்.  அதன்பிறகு, உங்களுக்கு வேண்டிய லாக்கரை கொடுக்க வேண்டும் அல்லது காத்திருப்புப் பட்டியல் குறித்த விவரங்களை வழங்க வேண்டும். லாக்கர் ஒதுக்கீடு தொடர்பான வெளிப்படைத்தன்மையை வழங்க ஆர்பிஐ இந்த விதிகளை வகுத்துள்ளது.  


மேலும் நீங்கள் ஒரு வங்கியில் புதிதாக லாக்கரை திறக்கும் போது அந்த வங்கி உங்களை நிலையான வாய்ப்புத்தொகை அக்கவுண்டை திறக்க சொல்லி கேட்கலாம். இது தேவையில்லாத ஒன்று என்றாலும் ஒருவேளை வாடிக்கையாளர்கள் அந்த லாக்கரை நீண்ட நாட்கள் பராமரிக்காமல் இருந்தாலும், அதற்கான கட்டணங்களை செலுத்தாமல் இருந்தாலும் வங்கி இந்த தொகையிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும். விதிமுறைகளின்படி, மூன்று வருடம் வாடகை செலுத்தப்படாமல் மற்றும் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தால், லாக்கரை வங்கி உடைத்து அதில் உள்ள பொருட்களை எடுத்து கொள்ளும்.


தற்போது ஆர்பிஐ வங்கி லாக்கரில் நாமினிகளை சேர்ப்பதை கட்டாயமாக்கி உள்ளது. வங்கி லாக்கர் வைத்திருப்பவர் எதிர்பாராத விதமாக இறந்துவிடும் பட்சத்தில் நாமினிகளிடம் லாக்கரை வங்கிகள் ஒப்படைக்கும். பல லாக்கர்கள் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடைக்கும் நிலையில் ஆர்பிஐ இந்த புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.  மேலும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் லாக்கரில் சேமிக்கும் பொருட்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்படவில்லை. உங்கள் லாக்கரில் உள்ள எந்த ஒரு பொருட்களுக்கு வங்கி காப்பீடு வழங்காது.  எனவே, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை லாக்கரில் சேமித்து வைத்தால், அவற்றை தொழில் ரீதியாக மதிப்பீடு செய்து தனித்தனியாக காப்பீடு செய்வது நல்லது.


மேலும் படிக்க | விமான நிலையத்தில் உங்கள் லக்கேஜ் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ