Confirm Train Ticket: பொதுவாக பண்டிகை காலம், விடுமுறை நாட்களில் ரயில் டிக்கெட் பெறுவது என்பது மிகவும் கடினமானதாகும். நெரிசல் மிகுந்த ரயில்களில், உறுதியான டிக்கெட்டை பெற பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியிருக்கு. எனினும் சிலரால் தங்களது வீடுகளுக்குச் செல்ல உறுதியான / கன்பார்ம் டிக்கெட்டுகளைப் பெற முடியாமல் போகிறது. மேலும் காத்திருப்போர் பட்டியலானது நீண்டு கொண்டே தான் செல்லும். காத்திருப்பு டிக்கெட்டுகள் பயணிகளுக்கு மட்டுமின்றி, ரயில்வே துறைக்கும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது காத்திருப்பு டிக்கெட் அதாவது வெயிட்டிங் டிக்கெட்டின் சிரமத்தை நீக்கும் விதமாக ரயில்வே தற்போது புதிய திட்டம் ஒன்றை கொண்டு வரப் போகிறது. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் விரிவாக காணபோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது நடந்து வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆனால் ரயில்வே பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகும் என்றும் வெயிட்டிங் லிஸ்ட் இருக்காது என்றும் சமீபத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  (Ashwini Vaishnaw) தெரிவித்து இருந்தார்.


ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் டிக்கெட் கிடைக்காவிட்டால் வெயிட்டிங் லிஸ்ட் என்ற நிலை ஏற்படும் என்றும் அதுவும் கிடைக்காமல் பல ரயில் பயணத்தை கேன்சல் செய்து விடுவதும் உண்டு. அந்த வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில் பயணம் செய்ய விரும்பும் அனைத்து பயணிகளுக்கும் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படும் என்று மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | முழு நேர வேலை பார்ப்பவர்களும் முதலாளி ஆகலாம்! ‘இதை’ செய்யுங்கள் போதும்..


மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல மாற்றங்களை செய்து உள்ளார் என்றும் அடுத்ததாக ரயில்வேயில் புதிய மாற்றம் வரவிருக்கிறது என்றும் எந்த பயணி எங்கு பயணம் செய்ய வேண்டும் என்றாலும் அவர்களுக்கு டிக்கெட் கன்பர்ம் செய்யப்படும் என்றும் வெயிட்டிங் லிஸ்ட் என்ற சூழலை இனி இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு வெயிட்டிங் லிஸ்ட் என்ற ஒன்றே இல்லாமல் ஆக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டு இருந்தது. அதனுடன் இந்த திட்டத்திற்காக ரயில்வே துரை ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம், 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய ரயில்கள் ரயில்வேயில் சேர்க்கப்படயுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த சில ஆண்டுகளில் பழைய ரயில்களுக்குப் பதிலாக புதிய ரயில்கள் இயக்கப்படும். அதே நேரத்தில், பயணிகளுக்கு போதுமான இருக்கைகளும் வழங்கப்படும் என்றும் அப்போது ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.


எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன:
காத்திருப்பு பட்டியல் (Waiting List) குறித்து பல பயணிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன என்பது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி ரயில்வேயின் காத்திருப்பு டிக்கெட்டுகளில் GNWL, RLWL, PQWL, RLGN, RSWL போன்ற காத்திருப்பு டிக்கெட்டுகள் அடங்கும்.


GNWL டிக்கெட்: GNWL என்றால் பொது காத்திருப்பு பட்டியல். இந்த காத்திருப்பு பயணச்சீட்டு, நீங்கள் செல்லும் ரயில் எந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறதோ அங்கு நீங்கள் ஏறும்பட்சத்தில் இது வழங்கப்படும். 


RLWL டிக்கெட்: RLWL என்பது Remote Location வெயிட்டிங் லிஸ்ட். உதாரணமாக, ஒருவர் ஹவுராவில் உள்ள பாட்னாவிலிருந்து டெல்லி ரயிலுக்கு டிக்கெட் எடுத்தால், அவருக்கு RLWL காத்திருப்பு டிக்கெட் கிடைக்கும். GNWL உடன் ஒப்பிடும்போது, ​​அத்தகைய காத்திருப்புப் பட்டியலில் உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.


PQWL டிக்கெட்: PQWL என்பது Pooled Quota வெயிட்டிங் லிஸ்ட். ரயிலின் தொடங்கும் இடம் மற்றும் இறுதி இலக்கு நிலையங்களுக்கு இடையே உள்ள எந்த நிலையத்திற்கும் இடையில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே PQWL கிடைக்கும். இந்த காத்திருப்பு டிக்கெட் கூட உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.


TQWL டிக்கெட்: TQWL என்றால் Tatkal Quota காத்திருப்பு பட்டியல். ஒரு பயணி தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்து, உறுதியான டிக்கெட் கிடைக்காதபோது, ​​ரயில்வே அவருக்கு TQWL டிக்கெட்டை வழங்குகிறது. இதுவும் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. 


மேலும் படிக்க | அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ