டி20 உலகக் கோப்பை: ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்... இந்த 5 பேர் மட்டுமே!

ICC T20 World Cup History: இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியின் இந்த 5 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம். 

  • Jun 17, 2024, 21:21 PM IST

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ளன. ஜூன் 19ஆம் தேதி சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

1 /8

டி20 போட்டிகள் என்றாலே அது பேட்டர்களுக்கான பார்மட் ஆகும். ஒவ்வொரு ஓவருக்கு சிக்ஸர்கள் பறக்க வேண்டும் என்பது டி20 போட்டிகளில் சொல்லப்படாத விதியாக மாறிவிட்டது. அந்த வகையில், ஒரு போட்டியில் பேட்டர்களை விட பந்துவீச்சாளர்கள் சிற்பபாக செயல்படும் வாய்ப்பு மிக குறைவுதான். அதுவும் வேகப்பந்துவீச்சாளர் இன்னும் குறைவே. எனவே ஆட்டநாயகன் விருதை அவர்கள் பெறுவது குறைவு. அதுதான் இந்த புள்ளிவிவரமும் காட்டுகிறது.   

2 /8

இந்திய அணியின் பேட்டரான விராட் கோலி 2012, 2014, 2016, 2021, 2022, 2024 என 6 டி20 உலகக் கோப்பையில் விளையாடி மொத்தம் 7 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். ஆனால், 2007ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டு வரை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மொத்தமாகவே 6 முறைதான் ஆட்ட நாயகன் விருதையே வென்றுள்ளனர்.   

3 /8

அதிலும் பும்ரா இரண்டு முறை கைப்பற்றியிருக்கிறார். இந்த 2024 தொடரில் மட்டும் 3 முறை வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். மீதம் உள்ள 8 தொடர்களில் 3 முறை தான் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். இந்நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய அணியின் வேக்பந்துவீச்சாளர்களை இங்கு காணலாம்.   

4 /8

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக அர்ஷ்தீப் சிங் 9 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.   

5 /8

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 14 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை மட்டுமின்றி ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார்.  இதே குரூப் சுற்று போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா 6 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.   

6 /8

2010ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.   

7 /8

2009ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜாகிர் கான்  19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.   

8 /8

2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இர்பான் பதான் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.