உத்தரப்பிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் அரசு, பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை அளித்து வரும் நிலையில் தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி இனி பால், பிரட், மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்ச்கள் போன்ற 35 பொது பயன்பாட்டு பொருட்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நியாயமான அரசு ரேஷன் கடைகளில் கிடைக்கும். இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில அரசு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த முடிவால் சாதாரண மக்களுக்கு ஒரே கடையில் அன்றாடப் பொருட்கள் கிடைக்குக்கூடும். அத்துடன் ரேஷன் கடைகளை நடத்துபவர்களின் வருமானமும் உயரும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில அரசின் அறிவிப்பின் படி, அரசு ரேஷன் கடைகளில் இனி கோதுமை, அரிசி, சர்க்கரையுடன் வெல்லம், நெய், உப்பு, பேக் செய்யப்பட்ட உலர்ந்த பழங்கள், பேக் செய்யப்பட்ட இனிப்புகள், பால் பவுடர், குழந்தைகளுக்கான ஆடை (உள்ளாடை), ராஜ்மா, சோயாபீன், கிரீம், ஊதுபத்தி, சீப்பு, கண்ணாடி, துடைப்பம், பூட்டு, ரெயின்கோட் போன்றவை விற்கப்படும். இதனுடன், வால் ஹேங்கர்கள், டிடர்ஜென்ட் பவுடர், பாத்திரம் கழுவும் பார், எலக்ட்ரானிக் பொருட்கள், சுவர் கடிகாரம், தீப்பெட்டி, நைலான், சணல் கயிறு, பிளாஸ்டிக் பைப் (தண்ணீர்), பிளாஸ்டிக் பக்கெட், குவளை மற்றும் வடிகட்டி ஆகியவையும் நியாயமான விலையில் விற்கப்படும்.


மேலும் படிக்க | தபால் துறை சிறு சேமிப்பில் முதலீடு செய்ய விதி மாற்றம்... என்ன தெரியுமா?


இது தவிர, ஹேண்ட் வாஷ், பாத்ரூம் கிளீனர் மற்றும் டயப்பர்கள், குழந்தை சோப்பு, மசாஜ் எண்ணெய், வைப்ஸ் மற்றும் பாடி லோஷன் போன்ற குழந்தை பராமரிப்பு பொருட்களும் கிடைக்கும். அதுமட்டுமின்றி கனரக வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலைகளில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே இந்த பொருட்கள் கிடைக்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனுடன், பொருட்களின் தரமும் உறுதி செய்யப்படும். இதற்கான உத்தரவுகளை உணவு மற்றும் தளவாடத் துறை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுமக்கள் நிவாரணம் பெறுவார்கள், கடைக்காரர்கள் பயன் பெறுவார்கள்
இந்த நிலையில் யோகி அரசின் இந்த முடிவால் உத்தரபிரதேச மக்களுக்கு நன்மை ஏற்படுவது மட்டுமின்றி, கடைக்காரர்களின் வருமானமும் அதிகரிக்கும். உத்தரப்பிரதேச அரசும் இந்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேலும் வரும் நாட்களில் மேலும் பல புதிய மாடல் கடைகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 


முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றை நடத்தினார். இக்கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஆய்வு செய்யப்பட்டு, தரம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திட்டமிட்ட தேதியில் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு கூறியது. அதேபோல் ரேஷன் கடையில் ரேஷன் கார்டை காண்பிப்பவருக்கு முழு பலன் கிடைக்கும்.


ரேஷன் கடைகளில் ஏதேனும் முறைகேடுகளை இருந்தால் புகார் எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்:
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082


மேலும் படிக்க | Post Office Scheme: அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் TDS கழிக்கப்படாது! யார் யாருக்கு பயன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ