சுகாதாரக் காப்பீட்டில் வரிச் சலுகை கிடைக்குமா? முக்கிய முடிவு விரைவில்
GST on Health Insurance: பிரீமியத்தின் மீது முழுமையான ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதை ஃபிட்மென்ட் கமிட்டி ஆதரிக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
GST on Health Insurance: சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சிலின் முக்கியமான சந்திப்பு செப்டம்பர் 9, 2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மருத்துவக் காப்பீடு மீதான ஜிஎஸ்டி தொடர்பான முடிவு எடுக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பிரீமியத்தின் மீது முழுமையான ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதை ஃபிட்மென்ட் கமிட்டி ஆதரிக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், கமிட்டி கவுன்சிலுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கவுன்சிலிடம் உள்ளது.
ஃபிட்மென்ட் கமிட்டி
ஃபிட்மென்ட் கமிட்டியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த குழு சில தெரிவுகளை சபைக்கு அளித்து தீர்மானத்தை கவுன்சிலிடமே விட்டுள்ளது. அந்த விருப்பங்களைத் தேர்ந்தெடுத்தால், வருவாயில் என்ன மாதிரியான தாக்கத்தைக் காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரக் காப்பீட்டில் 4 வழிகளில் ஒன்றின் மூலம் வரிக் குறைப்பு பரிசீலிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Life Insurance Company), காப்பீடு செய்தவருக்கு பலன்களை வழங்கும் போது மட்டும்தான் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி கருதுகிறது. ஆயுள் காப்பீட்டில் கால மற்றும் மறுகாப்பீட்டிற்கு மட்டுமே விகிதத்தை குறைப்பது குறித்து கவுன்சில் பரிசீலிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | NSC, NPS, PPF.... அதிக லாபத்துடன் வரி சேமிப்பிலும் உதவும் 5 அசத்தல் திட்டங்கள்
நிதின் கட்கரி வைத்துள்ள கோரிக்கை
காப்பீடு (Insurance) மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுமாறு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி என்பது மறைமுக வரி போன்றது. மோடி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் ஜூலை 1, 2017 அன்று ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி மூலம் நாட்டின் வரி அமைப்பில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இது அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வெவ்வேறு வரிகளுக்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்படுகிறது.
- ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, கால அல்லது ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு ஆகியவற்றுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டது.
- எனினும், ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இது 3 சதவீதம் அதிகரித்து, இந்த இன்சூரன்ஸ் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.
- வரியில் ஏற்பட்ட 3 சதவீத ஏற்றம், இன்சூரன்ஸ் பாலிசிகளின் (Insurance Policy) பிரீமியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
- பாலிசிகளின் விலைகள் அதிகரித்தன.
- இதற்கு சாதகமான வாதங்களில் வரி விலக்கு வசதி பற்றி கூறப்பட்டு அவ்வப்போது ஜிஎஸ்டிக்கு ஆதரவு தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க | EPS உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இனி அனைத்து வங்கிகளிலும் ஓய்வூதியம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ