Budget 2024: வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ், வட்டியில் ₹ 5 லட்சம் வரை வரிவிலக்கு!!
Budget 2024: ரியல் எஸ்டேட் துறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) தங்களுக்கு பயனளிக்கும் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Budget 2024: நாட்டின் பொது பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மோடி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும். இந்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளதால் இது ஒரு இடைக்கால பட்ஜெட்டாகத்தான் (Interim Budget) இருக்கும். எனினும், வாக்காளர்க்களை கவரும் வகையில், அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து துறையினருக்கும் தங்களுக்கான வலுவான அறிவிப்புகள் அரும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.
Union Budget 2024: ரியல் எஸ்டேட் துறையின் எதிர்பார்ப்புகள்
ரியல் எஸ்டேட் துறையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) தங்களுக்கு பயனளிக்கும் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொது மக்கள் அதாவது வரி செலுத்துவோர் தவிர, ரியல் எஸ்டேட் துறையினரும் இதன் மூலம் பெரும் பலன்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது ரூ.5 லட்சம் வரை வரிவிலக்கு
இந்திய ரியல் எஸ்டேட் (Real Estate) டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (CREDAI) வீட்டுக் கடனுக்கான (Home Loan) வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கோருகிறது. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டித் திருப்பிச் செலுத்துவதற்கான விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. இதை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வட்டி விகிதங்கள் (Interest Rates) மிக அதிகமாக இருப்பதாக CREDAI நம்புகிறது. 2024ன் இரண்டாவது காலாண்டு வரை ரெப்போ விகிதத்தைக் குறைப்பது எளிதல்ல. இது வீட்டுக் கடனின் இஎம்ஐயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடு வாங்குபவர்கள் ஒவ்வொரு மாதமும் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வருமான வரி பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு
வீட்டுக் கடனின் அசல் தொகையைச் செலுத்தினால் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகையைப் பெறலாம். இதில் ஸ்டாம்ப் ட்யூட்டி மற்றும் பதிவுக் கட்டணங்களும் அடங்கும். ஆனால் இவை செலுத்தப்பட்ட வருடத்தில் ஒருமுறை மட்டுமே கழிக்கப்படும். புதிய வீடு வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு மட்டுமே வீட்டுக் கடன் பெறப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | முடங்கிய UPI IDகள்! இனி யாரெல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாது தெரியுமா?
குறிப்பு:
வீட்டை வாங்கிய 5 ஆண்டுகளுக்குள் நீங்கள் அதை விற்றால், பிரிவு 80C-ன் கீழ் இதுவரை பெற்ற வரிச்சலுகை நீங்கள் வீட்டை விற்ற ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்படும்.
வருமான வரிப் பிரிவு 24(b) இன் கீழ் வீட்டுக் கடன் வட்டி செலுத்துதலுக்கு வரி விலக்கு
வீட்டுக் கடனுக்கான வட்டியைச் (Home Loan Interest) செலுத்தும்போது ரூ.2 லட்சம் வரை வரிவிலக்கு (Tax Exemption) பெறலாம். கடன் வாங்கப்பட்ட வீடு, நீங்கள் அதில் வசிக்கிறீர்களா அல்லது காலியாக இருந்தாலும் சரி, இது செல்லுமும். ஆனால், அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தால், வரி விலக்கு பலன் கிடைக்காது.
ரியல் எஸ்டேட்டில் தேவை அதிகரிக்கும்
வீட்டுக் கடன்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், நடுத்தர வருவாய் பிரிவினரின் வீட்டு உரிமையாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும், மற்றவர்களுக்கும் வீடுகளை வாங்கத் தூண்டுதல் கிடைக்கும். CREDAI தலைவர் மனோஜ் கவுர், 'இந்தத் துறையின் வளர்ச்சிக்கு, தேவை இருப்பது அவசியம், மேலும் வரி செலுத்துவோருக்கு வரி விலக்கில் சில நன்மைகள் அளிக்கப்படும்போதுதான் தேவை அதிகரிக்கும்' என்று கூறுகிறார். ரெப்போ விகிதம் (Repo Rate) அதிகரிப்பால், வட்டி விகிதங்கள் வீட்டுக்கடன் மீதான கடன்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவை நிலையாக இருந்தாலும், வீட்டு தேவை அதிகரிக்காது. எனவே, வரி செலுத்துவோருக்கு (Taxpayers) மத்திய அரசு (Central Government) விலக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் இத்துறை மீண்டும் வேகம் பெற முடியும்.
வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு பெறுவது எப்படி
வருமான வரிச் சட்டத்தின் 24வது பிரிவின் கீழ், வீட்டுக் கடன் செலுத்துதலுக்கு வரிச் சலுகை கிடைக்கும். EMI இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி வட்டி மற்றும் மற்றொன்று அசல். பிரிவு 24(பி)ன் கீழ் ஒரு நிதியாண்டில் வட்டிப் பகுதிக்கு ரூ.2 லட்சம் வரி விலக்கு கிடைக்கும். பிரிவு 80C இன் கீழ் மூல தொகை அதாவது பிரின்சிபல் தொகையில் விலக்குக்கான ஆதாயம் கிடைக்கிறது. இதன் வரம்பு ரூ. 1.5 லட்சம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ