பழைய ஓய்வூதிய திட்டம்.... முக்கிய அப்டேட்: மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை
Old Pension Scheme: ரிசர்வ் வங்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.
Old Pension Scheme, Latest Update: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அதிகப்படியான பலன்களை அளிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில் பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. குறிப்பிட்ட சில ஊழியர்கள் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறவுள்ளனர்.
நாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சில மாநிலங்கள் அதை செயல்படுத்தியும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்த மாநிலங்களின் நிதி பிரச்சினைகள் கணிசமாக அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. ரிசர்வ் வங்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. நேஷனல் பிசிக்கல் ஹொரைசானுக்கு இது மிகப்பெரிய பிரச்சனை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ரிசர்வ் வங்கி, சுகாதார, கல்வி, உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி ஆகியவற்றில் அதிக மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநில நிதி தொடர்பான தனது சமீபத்திய அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நிதி ஆதாரங்களில் வருடாந்திர சேமிப்பு என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகிவிடும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிகழ்காலச் செலவுகள், எதிர்காலத்தில் அரசுக்கு நிதியில்லாத ஓய்வூதியப் பொறுப்பு வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி (Reserve Bank) 2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. இதில், அரசு ஊழியரின் கொடுப்பனவில் 10% பங்களிக்கப்படுகிறது. அதே பங்களிப்பை NPS இல் முதலாளி / நிறுவனமும் செய்கின்றனர். மன்மோகன் சிங்கின் முக்கிய உதவியாளரான மான்டேக் சிங் அலுவாலியா உட்பட பல பொருளாதார நிபுணர்கள் அரசின் முடிவை விமர்சித்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில், ஓய்வூதியத்திற்கான செலவு ஏற்கனவே செலவினத்தை விட அதிகமாக உள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் இப்போது பரிசீலித்து வருகிறது. இதில், ஓய்வூதியதாரர்களின் கூடுதல் வருவாய் குறித்தும் கவனம் செலுத்தப்படும். இதனுடன், அரசின் பங்களிப்பை 14%க்கும் அதிகமாக உயர்த்தும் திட்டமும் உள்ளது. எனினும், கருவூலத்திற்குச் சுமை ஏற்படாமல் பங்களிப்பை அதிகரிக்க வழி காணப்படுகின்றது. ஓய்வூதியத்தை அதிகரிக்க, வருடாந்திரத்தில் அதிக முதலீடு செய்யலாம். தற்போது, மொத்த நிதியில் 40% வருடாந்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, அதில் இருந்து கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் 35% ஓய்வூதியமாக பெறப்படுகிறது. இருப்பினும், இது சந்தையுடன் இணைக்கப்படுவதால் இதற்கான உத்தரவாதம் இருக்காது.
நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை
அரசு ஊழியர்களுக்காக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. இப்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே (என்பிஎஸ்) புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும் என கூறப்படுகின்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தைத் தயாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் பிரபலமாக்க இந்தக் குழு இப்போது செயல்படும்.
இதில் உத்தரவாதமான வருமானம் இருக்கும், கூடுதல் வருமானம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனுடன், அரசின் பங்களிப்பை 14% வரை உயர்த்தும் திட்டமும் உள்ளது. தேசிய ஓய்வூதிய முறை அல்லது புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக புதிய ஏற்பாடு செய்யப்படும். மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த அமைப்பு இருக்கும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சந்தோஷத்தில் திளைக்கும் ஊழியர்கள்... ஊதியத்தை அதிகரித்த மாநில அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ