இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தியினை வழங்கியுள்ளது, அதாவது அதன் உறுப்பினர்களுக்கான எக்ஸ்-க்ரேஷியா தொகையை ரூ.4.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்துமாறு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  அந்த அறிக்கையின்படி, மத்திய வாரியத்தின் இறந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 30,000 ஊழியர்கள் பயனடைவார்கள் என்று கருதப்படுகிறது.  மேலும் நிறுவனம் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மற்ற அலுவலகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளது.  சமீபத்தில் இபிஎஃப்ஓ அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இ-நாமினேஷன் குறித்து பதிவிட்டிருந்த ட்வீட்டில், ஒருவர் ஏன் இ-நாமினேஷனை தாக்கல் செய்ய வேண்டும், ஒரு ஊழியருக்கு இ-நாமினேஷன் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து பதிவிட்டுள்ளது.  இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் சில எளிய வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் இ-நாமினேஷனை தாக்கல் செய்ய முடியும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி 


இதனை செய்ய நீங்கள் இபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in-க்கு செல்ல வேண்டும், அதில் சர்விசஸ் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, பின்னர் 'ஃபார் எம்பிளாய்ஸ்' என்பதை தேர்வு செய்யவேண்டும்.  இப்போது, ​​'மெம்பர் யூஏஎன்/ஆன்லைன் சேவை (ஓசிஎஸ் /ஓடிபி )' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், அதனைத்தொடர்ந்து யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை பயன்டுத்தி லாக் இன் செய்யவேண்டும்.  அடுத்ததாக  ​​'மேனேஜ் டேப்' என்பதன் கீழ் உள்ள  'இ-நாமினேஷன்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதன் பின்னர் 'ப்ரொவைட் டீட்டெயில்ஸ்' என்று திரையில் தோன்றும், அப்போது 'சேமி' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.  இப்போது குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க, 'ஆம்' என்பதைக் கிளிக் செய்த பிறகு, 'ஆட் பேமிலி டீட்டெயில்ஸ்' என்பதைக் கிளிக் செய்யவும், இதில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளை சேர்க்கலாம்.



அதன் பிறகு மொத்தத் தொகையை அறிய 'நாமினேஷன் டீட்டெயில்ஸ்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், பிறகு 'சேவ் இபிஎஃப் நாமினேஷன்' என்பதைக் கிளிக் செய்யவும்.  இப்போது ஓடிபி-ஐ பெற 'இ-சைன்' என்பதை க்ளிக் செய்து ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் இபிஎஃப்ஓ-வில் இ-நாமினேஷன் பதிவு செய்யப்படும்.  இதற்கென நீங்கள் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ