இலவச ரேஷன் பெறுவோருக்கு மிகப்பெரிய அப்டேட், அரசு செய்ய புதிய மாற்றம்
Ration Card Rules: ரேஷன் கார்டுதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டு உத்தரகாண்ட் அரசு மற்றொரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. அரசின் இந்த மாற்றத்தால் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள்.
இலவச ரேஷன்: மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் ரேஷன் கார்டில் இலவச மற்றும் மலிவான ரேஷன் ராகி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஏழைத் தொழிலாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளின் நேரத்தை அரசு மாற்றியது. தற்போது உத்தரகாண்ட் அரசு ரேஷன் கார்டுதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டு மற்றொரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. அரசின் இந்த மாற்றத்தால் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள். அதன்படி இனி உத்தரகாண்ட் அரசு கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ ராகியை இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
மே மாதம் முதல் ஒரு கிலோ ராகி வழங்கப்படும்
இந்த நிலையில் இலவச ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போதுள்ள ரேஷனில் ஒரு கிலோ அரிசி குறைவாக வழங்கப்படும். அதற்கு பதிலாக, மே மாதத்திக் இருந்து அதாவது இந்த மாதம் முதல் ஒரு கிலோ ராகி வழங்கப்படும். இது தொடர்பான உத்தரவை, மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையும் வெளியிட்டுள்ளது. மேலும் சத்தான உணவு தானியங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் மலிவு விலை ரேஷன் கடையில் கார்டுதாரர்களுக்கு ராகி இலவசமாக வழங்க திட்டம் வகுக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் செயலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க | திருமணமானவர்களுக்கு மோடி அரசின் பரிசு, மாதந்தோறும் பணம் கிடைக்கும்
மே 10 முதல் 20 வரை ரேஷன் விநியோகம் செய்யப்படும்
இதனிடையே மே மாதத்திற்கான ரேஷன் வருகிற மே 10 முதல் 20 வரை விநியோகிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த மாதம் முதல் ரேஷன் பொருட்களில் ராகி வழங்கப்படும். ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ராகி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 13.91 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அதன்படி இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ராகி வழங்கப்படும். அத்துடன் ராகி வழங்கப்படுவதால் இனி ஒரு கிலோ அரிசியின் அளவு குறைக்கப்படும்.
ரேஷன் வினியோக நேரத்தில் மாற்றம்
இதைக்கிடையில் தற்போது ரேஷன் வினியோக நேரத்தில் அரசு செய்த மாற்றத்தின்படி, இனி ரேஷன் கடை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். இதன் மூலம், மக்கள் வசதியாக ரேஷன் எடுக்க முடியும். நேர மாற்றம் ஏழைப் பிரிவினரின் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். முன்னதாக உ.பி.யில் அரசு இந்த நேரத்தை மாற்றியது. அதேபோல் உ.பி.யில் ஒவ்வொரு மாதமும் 13 முதல் 24 வரை ரேஷன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ராகி
நாடு முழுவதும் இந்த ஆண்டு சிறு தானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு சிறுதானியங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தல 2 கிலோ ராகி இன்று முதல் வழங்கப்படும்.
ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082
மேலும் படிக்க | EPFO கொடுத்த காலவகாசம் - ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ