கிரிப்டோகரன்சி Bitcoin மதிப்பு $56,580, அதன் மதிப்பு அதிகரிப்பதன் மர்மம் என்ன?
பிட்காயினில், டெஸ்லா போன்ற மிக பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர். கிரிப்டோகரன்சியின் மதிப்பு தற்போது இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
கிரிப்டோகரன்சி பிட்காயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசியாவில் பிட்காயின் விலை, 56,580 டாலர் அதாவது, கிட்டத்தட்ட 42 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. டெஸ்லா உட்பட பல பெரிய நிறுவனங்கள் இதில் அதிக முதலீடு செய்துள்ளன.
கிரிப்டோ நாணயம் பிட்காயின் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இது தற்போது அமெரிக்க டாலர்களைத் தாண்டி, 56,580 டாலர் என்ற அளவை தாண்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டில், உச்சத்தை தொட்டுள்ள பிட்காயின், என்னும் உலகின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சியின் மதிப்பு தற்போது இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பிட்காயினில், டெஸ்லா (Tesla) போன்ற பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதும், அதன் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆசியாவில் அதன் வர்த்தகம் 1.6 சதவீதம் உயர்ந்து இன்று அதன் மதிப்பு 64,207 டாலரை எட்டியுள்ளது. கிரிப்டோகரன்சி அடிப்படையிலான பங்கு உரிமைகள் ப்ளாக் செயின் இன்கர்பரேஷன், மராத்தான் டிஜிட்டல் ஹோல்டிங் இன்கார்பரேஷன் ஆகியவை இதில் முதலீடு செய்துள்ளதாலும், அமெரிக்க சந்தையிலும் இதன் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதாலும், அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. அதன் நிலைத்தன்மை குறித்து பல நிபுணர்களின் சந்தேகம் எழுப்பியுள்ள போதிலும், இந்த கிரிப்டோகரன்சி அமெரிக்காவின் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு சந்தையான வால் ஸ்ட்ரீட்டில் இதன் விற்பனை அதிகரித்துள்ளது. அதனால்தான் ஏப்ரல் 14 அன்று பிகாயின், 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் NASDAQ-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.
ALSO READ | Laptop வாங்க போறீங்களா; நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்இன்கார்பரேஷன் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற வர்த்தக உலக ஜாம்பவான்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மூலம் இந்த கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். டெஸ்லா இன்கார்ப்ரேஷன் நிறுவனம் கடந்த ஆண்டு, பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ததாக அறிவித்தது. அதோடு மட்டுமல்லாமல், நிறுவனம் தனது மின்சார காருக்கு பதிலாக பிட்காயினையும் ஏற்றுக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தது. டெஸ்லாவின் இந்த அறிவிப்பினால், பிட்காயின் முதலீடு பெருமளவு அதிகரித்தது.
கிரிப்டோ நாணயம் ஒரு டிஜிட்டல் நாணயம், இது டிஜிட்டல் வடிவில் தனிப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது. கிரிப்டோகிராஃபி மற்றும் பிளாக்செயின் போன்ற விநியோகஸ்தர் லேசர் தொழில்நுட்பத்தின் (டி.எல்.டி) அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது. இதை ஒரு எளிய வழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இது ஒரு பிளாக்செயின் புத்தகம், இதில் பரிவர்த்தனைகள் தொகுதிகளாக பதிவு செய்யப்பட்டு குறியாக்கவியலைப் (Cryptography) பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்