நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி புதன்கிழமையன்று 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.  2024 பொதுத் தேர்தலுக்கு முன் அவரது ஐந்தாவது மற்றும் அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் கூட்டம் இதுவாகும்.  வரிச்சலுகைக்காக காத்திருப்பவர்கள் தவிர இன்னும் பல்வேறு துறைகளிலிருந்து எதிர்பார்ப்புகள் பெருகியுள்ளது.  பட்ஜெட் தாக்கலின்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) பட்ஜெட்டில் மிகுந்த கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று வருமான வரி தொடர்பான அறிவிப்பு, ஏனெனில் இவை தான் மக்களையும் அரசாங்கத்தின் கருவூலத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது.  வரி விலக்கு அல்லது தள்ளுபடி வரம்புகளை உயர்த்துவதன் மூலம் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் நிவாரணம் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  2023-23 யூனியன் பட்ஜெட்டில் பிரிவு 80C-ன் கீழ் விலக்கு வரம்பை தற்போது ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வரி செலுத்துபவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Provident Fund: மொபைல் நம்பர், SMS மூலம் நிதி இருப்பை சரிபார்த்து கொள்வது எப்படி?


2) சந்தைகள் மற்றும் பாலிசி மேக்கர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான அளவீடு நிதி பற்றாக்குறை ஆகும்.  இது அரசாங்கத்தின் பொருளாதார நிலையின் ஆரோக்கியத்தையும், கடன் வாங்குவதைச் சார்ந்திருப்பதையும் காட்டுகிறது.  இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி 2022ம் ஆண்டில் ஏப்ரல்-நவம்பர் மாதத்தில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.78 லட்சம் கோடியாக இருந்தது, முழு நிதியாண்டு இலக்கில் 58.9 சதவீதமாக இருந்தது.  கடந்த ஆண்டில் நிதி பற்றாக்குறையானது முழு நிதியாண்டு இலக்கில் 46.2 சதவீதமாக இருந்தது. 


3) 2022-23 நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் பங்கு விலக்கல் இலக்கு ரூ.65,000 கோடியாக உள்ளது, இதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்குவதன் மூலம் அரசாங்கம் சுமார் ரூ.31,000 கோடி சேமித்துள்ளது.  கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் சரிவை கண்டு வருகிறது. 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கு விலக்கல் இலக்கை ரூ.1.75 லட்சம் கோடியாகக் நிர்ணயித்திருந்தார், பின்னர் அது ரூ.78,000 கோடியாக மாற்றப்பட்டது. அதேசமயம் 2021-22 நிதியாண்டில் மாப்-அப் ரூ.13,531 கோடியாக இருந்தது.  நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மெகா ஐபிஓ, எல்ஐசி ஐபிஓ, இரண்டு அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்குவது போன்ற செயல்கள் நிலுவையில் உள்ளது.


4) 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் தொற்றுநோயால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க மூலதனச் செலவுகள் உதவிகரமாக இருந்தது.  வெளியாகியுள்ள தகவல்களின்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதியாண்டில் தனியார் முதலீட்டில் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பெரிய செலவுத் திட்டங்களை பற்றி வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.  2023-24 பட்ஜெட்டில் மூலதனச் செலவினங்களை உயர்த்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


5) 2023-ம் ஆண்டில் சர்வதேச தினை ஆண்டை கொண்டாடுவதற்கும், ஊட்டச்சத்து தானியங்களின் சாகுபடி மற்றும் நுகர்வுகளை மேம்படுத்துவதற்கும் இந்தியா தயாராகி வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் தினைக்கான சிறப்பு நிதி அல்லது எதாவது மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தினை ஆண்டு 2023க்கான முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது.


மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ