உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதா? சரிபார்க்க சில வழிகள்!

PAN-Aadhaar Link: வருமான வரி சட்டம், 1961-ன் படி, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31.3.2023 ஆகும்.   

Written by - RK Spark | Last Updated : Jan 30, 2023, 06:44 AM IST
  • பான் ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி தேதி.
  • இணைக்கப்படாத கார்டுகள் ரத்து செய்யப்படும்.
  • வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதா? சரிபார்க்க சில வழிகள்! title=

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படாவிட்டால் மார்ச் 31, 2023க்குப் பிறகு பான் கார்டுகள் செயல்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) கூறியுள்ளது.  மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31, 2022-லிருந்து மார்ச் 31, 2023 வரை நீட்டித்து இருக்கிறது.  இருப்பினும் இப்போது நீங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டுமானால் ரூ.1000 செலுத்த வேண்டும்.  மார்ச் 31, 2023க்குள் நுகர்வோர் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆலோசனையின்படி அவர்களின் பான் எண் செயலிழந்துவிடும்.  பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கும் செயல்முறையை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.  வருமான வரித்துறை சமீபத்தில் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டில், 'வருமான வரி சட்டம், 1961-ன் படி, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31.3.2023 ஆகும்.  விதிவிலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் ஆதாருடன் இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க | Provident Fund: மொபைல் நம்பர், SMS மூலம் நிதி இருப்பை சரிபார்த்து கொள்வது எப்படி?

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க செய்யவேண்டியவை:

1) (https://www.incometaxindiaefiling.gov.in/) என்கிற இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

2) முகப்புப்பக்கத்தில் 'குயிக் லிங்க்' பிரிவின் கீழ் கிடைக்கும் 'லிங்க் ஆதார்' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3) உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பாண், ஆதார் எண் மற்றும் உங்கள் பெயரை உள்ளிட வேண்டிய இடத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கும்.

4) அதில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'லிங்க் ஆதார்' என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.

ஆதார்-பான் இணைப்பின் நிலையை சரிபார்த்தல்: 

1) வருமான வரியை மின்னணு முறையில் தாக்கல் செய்ய incometax.gov.in பக்கத்திற்கு செல்லவும்.

2) 'லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்' ஆப்ஷனை தேட வேண்டும். 

3) பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு, 'வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

4) பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் உங்கள் திரையில் ஒரு செய்தி தோன்றும். 

5) இப்போது பான் கார்டின் 10 இலக்கங்கள், 12 இலக்க ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படும்.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News