Income Tax Calculator: உங்கள் வருமான வரியை கணக்கிட வேண்டுமா - இதை பண்ணுங்க!

Income Tax Calculator: வருமான வரி கால்குலேட்டர் மூலம் எளிதாக, அடுத்த நிதியாண்டுக்கான உங்களின் சொந்த வருமான வரியை நீங்கள் கணக்கீடு செய்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 28, 2023, 12:00 PM IST
  • பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்.
  • பட்ஜெட் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Income Tax Calculator: உங்கள் வருமான வரியை கணக்கிட வேண்டுமா - இதை பண்ணுங்க! title=

Income Tax Calculator: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. 

கூடுதலாக, அடுத்த 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் இதுவே கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், அதிக அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வருமான வரி செலுத்துவோர் பட்ஜெட் மீதும் ஒரு கண் வைத்திருப்பார்கள். 

கடந்த பட்ஜெட்களில் வரி கழித்தல்கள், வரி விலக்குகள் போன்ற பல்வேறு நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை பெரும்பாலும் பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. இத்தகைய அணுகுமுறை வரி செலுத்துவோர் சிக்கலான விதிகளைப் புரிந்துகொண்டு பயன்பெறுவதை கடினமாக்கியுள்ளது.

மேலும் படிக்க | Budget expectations: வருமான வரி விலக்கு 6 லட்சம் ரூபாயாக உயரும்! மக்களின் எதிர்பார்ப்பு

பலர் வருமான வரியை தீமையாக பார்க்கிறார்கள். வரி விதிப்புகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், வரி விலக்கு, வரிச்சலுகை, வரி விலக்கு போன்ற பல வாசகங்கள் இருப்பதால், நமது வருமானத்தில் எத்தனை சதவீதம் வரி விதிக்கப்படுகிறது, எப்படி பணத்தைச் சேமிப்பது என்பது கூட சிலருக்கு தெரிவதில்லை. வரி சேமிப்பு உள்பட.

வருமான வரி கால்குலேட்டர் மூலம் உங்கள் வருமான வரியை எவ்வாறு கணக்கிடலாம் என்பதை இங்கே
 காணலாம். "வருமான வரியை எப்படிச் சமர்பிப்பது" என்று அனைவரும் கேட்கிறார்கள். எனவே நடப்பு மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்யும்போது எவ்வளவு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வருமான வரி கால்குலேட்டரை பார்க்கலாம். (வருமான வரி கால்குலேட்டருக்கு இதை கிளிக் செய்யவும்)

இந்த கால்குலேட்டரில் உங்கள் வருமான வரியைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகள்:

1. வருமான வரி கால்குலேட்டரைத் திறக்கவும்

2. நீங்கள் வரிகளை கணக்கிட விரும்பும் நிதியாண்டை நிரப்பவும்

3. உங்கள் வயதைத் தேர்ந்தெடுக்கவும்

4. உங்களின் அனைத்து வருமானங்களின் விவரங்களையும் நிரப்பவும்.

5. வருமானத்தில் இருக்கும் கழித்தல் விவரங்கள் ஏதேனும் இருந்தால் நிரப்பவும்.

6. சமர்ப்பிக்கவும், உங்கள் வருமான வரி பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுவீர்கள்.

இந்த வருமான வரி கால்குலேட்டர் உங்கள் வருமானத்தின் அடிப்படையில் மிக சமீபத்திய வருமான வரி விகிதங்களையும் வழங்குகிறது. வருமான வரிச் சட்டம் நீங்கள் கோருவதற்கு அனுமதிக்கும் எண்ணற்ற வருமானங்கள் மற்றும் விலக்குகளுக்கான கணக்குகளை வழங்குகிறது. மதிப்பீட்டு ஆண்டில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, உங்கள் நிறுவனத்தின் படிவம் 16ஐ கையில் வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் வருமான வரி படிவங்கள் கிடைக்கின்றன.

மேலும் படிக்க | பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் நீண்டகால ஏக்கங்களை பூர்த்தி செய்வாரா நிதியமைச்சர் நிர்மலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News