Budget 2024: பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இதன் காரணமாக ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் மீது அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய ஓய்வூதிய அமைப்பு


இது தவிர பட்ஜெட்டில், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல பெரிய அறிவிப்புகளை அரசு வெளியிடலாம் என்று கூறப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில், என்பிஎஸ் பங்களிப்புக்கான வரி விலக்கு வரம்பை 12 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது அது 10 சதவீதமாக இருக்கின்றது. 


பழைய வரி விதிப்பு முறையின் மூலம் பலன்


என்.பி.எஸ் -இல் முதலீடு செய்தால் வருமான வரியின் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் பலன் கிடைக்கும். தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது முதுமையில் பாதுகாப்பு அளிக்க அரசு நடத்தும் சேமிப்பு திட்டமாகும். இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகின்றது. என்பிஎஸ் -இல் டெபாசிட் செய்யப்படும் பணம் மற்றும் அதற்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். எனினும், இதிலிருந்து பணம் எடுக்கும்போது சிறிதளவு வரி விதிக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் இதன் வரி விலக்கு வரம்பை அதிகரிக்க PFRDA பரிந்துரை செய்துள்ளது. 


சம்பளத்தில் 10% வரை டெபாசிட் செய்யும் வசதி


NPS -இன் கீழ், சம்பளம் வர்க்கத்தினர் ஊதியத்தில் 10% வரை டெபாசிட் செய்யலாம். வணிகர்கள் தங்களின் மொத்த வருமானத்தில் 20% வரை இந்த கணக்கில் டெபாசிட் செய்யலாம். இதில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD(1)ன் கீழ் நன்மை கிடைக்கின்றது. பழைய வரி முறையில் (Old Tax Regime), பிரிவு 80சியின் கீழ் கிடைக்கும் ரூ.1.5 லட்சம் வரம்புடன் இதை இணைக்கலாம். பழைய வரி விதிப்பில் இருப்பவர்களுக்கு, NPS இல் தானாக முன்வந்து டெபாசிட் செய்த தொகையில், வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ் 50,000 ரூபாய் வரை விலக்கு கிடைக்கும். 


மேலும் படிக்க | PM Kisan உதவித்தொகை உயர்த்தப்படுமா? பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்ல செய்தி!!


NPS வரம்பை அதிகரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?


சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு, NPS -இல் செய்யப்படும் தன்னார்வப் பங்களிப்புக்கான கூடுதல் விலக்கு, பழைய வரி முறையின் கீழ் மட்டுமே கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையிலும் (New Tax Regime) அரசு இந்த விலக்கை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், அதனால் இரண்டு நன்மைகள் கிடைக்கும். 


- முதலாவதாக, புதிய வரி விதிப்பு முறையிலும், வரி செலுத்துவோர் கூடுதல் விலக்குகளின் பலனைப் பெறுவார்கள்.


- இரண்டாவதாக, புதிய வரி முறையுடன், ஓய்வூதிய திட்டங்களிலும் இதனால் முதலீட்டின் அளவு அதிகரிக்கும்.


பங்களிப்பு அதிகரித்தால், இன் ஹேண்ட் சேலரி குறையும்


தற்போது, ​​பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ், முதலாளியின் பங்களிப்பில் (அதிகபட்சம் 10%) விலக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த வரம்பை 12% ஆக அதிகரிப்பதை பற்றி  அரசாங்கம் யோசிக்கலாம் என கூறப்படுகின்றது. இது நடந்தால், பிஎஃப் பங்களிப்பில் 12% வரை தள்ளுபடி போன்ற சூழல் உருவாகும். இதன் மூலம் சம்பள வர்க்கத்தினர் பயனடைவார்கள். 


இருப்பினும், முதலாளியின் பங்களிப்பு அதிகரித்தால், ஊழியர்கள் கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது இன் ஹெண்ட் சேலரியாக கிடைக்கும் சம்பளத்தின் அளவு குறையக்கூடும். புதிய வரி விதிப்பை அனைவருக்கும் விருப்பமான வரி விதிப்பு முறையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


ஸ்டேண்டர்ட் டிடக்‌ஷன் வரம்பை அதிகரிக்க பரிசீலனை


இது தவிர, புதிய வரி விதிப்பின் கீழ் கிடைக்கும் ரூ.50,000 நிலையான விலக்கு வரம்பை (Standar Deduction) ரூ.75,000 ஆக உயர்த்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஊதியம் பெறும் வகுப்பினர் எந்த வரி விதிப்பைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பயனடைய முடியும். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 2024 பட்ஜெட்டில் அதைச் செயல்படுத்தலாம் என கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ