செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில்நுட்ப பயன்பாடு உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. மனித மூளை போன்றே செயல்படும், 'Artificial Intelligence' என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் இன்று உலகின் சிந்தனை போக்கையே மாற்றி அமைத்து வருகிறது. நாளைய உலகை ஆளப்போவது இந்த தொழில்நுட்பம் தன எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செயற்கை நுண்ணறிவு AI மற்றும் மெஷின் லேர்னிங் ML 


AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இத்துறை வல்லுநர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என ராண்ட்ஸ்டாட்டின் என்னும் பணியாளர் நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. தொற்றுநோய் பரவலுக்கு பிறகு, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு AI மற்றும் மெஷின் லேர்னிங் (Machine learning - ML) தொடர்பான வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும், சுமார் 30% அதிகரித்து வருகின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தவிர, மற்ற டிஜிட்டல் திறன்களுக்கான தேவையும் கிட்டத்தட்ட இரு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருகிறது.


அதிகரிக்கும் AI தொழில்நுட்ப தேவை


இந்தியாவில் சுமார் 2 லட்சம் பேருக்கு AI மற்றும் ML திறன்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், புதிய வகையான வேலை வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. மேலும் பல, நிறுவனங்கள் வளர்ந்து வரும் இன்றையை டிஜிட்டல் தேவைகளுக்கு ஏற்ப AI மற்றும் ML தொழில்நுட்ப திறன் பெற்றவர்களை சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.


அதிக சம்பளம் பெற உதவும் AI தொழில்நுட்ப திறன்
 
பல பணிகளில், AI மற்றும் ML தொழில்நுட்பங்கள், மனிதர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், இந்தியாவில் உள்ள MNC என்னும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களிலும், உலகளாவிய திறன் மையங்களிலும் AI மற்றும் ML தொடர்பான வேலைகளுக்கான தேவைஅதிகரித்து வருகின்றன. இந்த மையங்கள் தாய் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்தியாவில் உள்ள உள்ளூர் திறமைசாலிகளை பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றன. அதோடு, இந்தியாவில் உள்ள பல வணிகங்களும் டிஜிட்டல் மயமாக தயாராக உள்ளன. இதில் AI மற்றும் ML சிறப்புப் பங்கு வகிக்கின்றன. மற்ற டிஜிட்டல் வேலைகளுடன் ஒப்பிடுகையில், AI மற்றும் இயந்திர கற்றல் தொடர்பான வேலைகளில் சம்பளமும் சிறப்பாக உள்ளது. இது தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுக்கின்றன.


மேலும் படிக்க | தேர்தல் முடிவும் வரை எவ்வளவு பணம் கையில் கொண்டு செல்லலாம்? விதிகள் சொல்வது என்ன?


AI மற்றும் ML வல்லுநர்கள் 


0 முதல் 5 ஆண்டுகள் அனுபவமுள்ள AI மற்றும் ML வல்லுநர்கள் ஐடி சேவை நிறுவனங்களில் ரூ.14 முதல் 18 லட்சம் வரையிலும், ஜிசிசியில் ரூ.16 முதல் 20 லட்சம் வரையிலும், தொழில்நுட்ப கருவி தயாரிப்பு நிறுவனங்களில் ரூ.22 முதல் 26 லட்சம் வரையிலும் சம்பளம் பெறலாம். அதேசமயம் இதே அனுபவம் உள்ள மற்ற டிஜிட்டல் துறைகளில் சம்பளம் ரூ.8 முதல் 22 லட்சம் வரை கிடைக்கின்றது. 10 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள AI மற்றும் ML நிபுணர்கள் ரூ.44 லட்சம் முதல் ரூ.96 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். மேலும், AI-ML துறையில் கிடைக்கும் சம்பள உயர்வும் சிறப்பாக இருக்கும். பிற துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் 9 சதவிகிதம் சம்பள உயர்வை மட்டுமே எதிர்பார்க்கலாம். அதேசமயம் AI-ML பிரிவில் குறைந்தபட்சம் 12 சதவிகிதம் உயர்வு கிடைக்கும். சில சந்தர்ப்பங்களில் 50 சதவிகிதம் வரை கூட சம்பள உயர்வு இருக்கலாம்.


AI புதிய வேலை வாய்ப்பிகளைஉருவாக்குகிறது


செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் பிரிவுகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. சுமார் 12 புதிய வகையான வேலைகள் உருவாகியுள்ளன. இதில் சாட்போட் டெவலபர் (Chatbot Developer மற்றும் பிரம்ப்ட் இன்ஜினீயர் (Prompt Engineer), AI ட்தொழில்நுட்ப நெறிமுறைகள் நிபுணர் மற்றும் ரோபாட்டிக்ஸ் பொறியாளர் போன்ற உயர் பதவிகளில் உள்ள பல வித பணிகள் இதில் அடங்கும். இது தவிர, ல்வித் துறையில் AI பாடத்திட்ட டெவலப்பர் போன்ற பணிகளும் உண்டு. ஐடி துறையில் உள்ள பாதுகாப்பு அம்ச மேம்ப்பட்டு வல்லுநர்கள் AI துறையில் பாதுகாப்பு அம்ச நிபுணர்களாக மாற உதவும் சில பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக, பயிற்சியாளருக்கான வாய்ப்பு, அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | SBI: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! கட்டணத்தை உயர்த்திய வங்கி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ