தேர்தல் முடிவும் வரை எவ்வளவு பணம் கையில் கொண்டு செல்லலாம்? விதிகள் சொல்வது என்ன?

இந்தியாவில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக பணம் அல்லது அதிக நகைகள் எடுத்து செல்ல கூடாது.  உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2024, 03:29 PM IST
  • 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல்.
  • தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது.
  • தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
தேர்தல் முடிவும் வரை எவ்வளவு பணம் கையில் கொண்டு செல்லலாம்? விதிகள் சொல்வது என்ன? title=

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 16ஆம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியா முழுவதும் மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் பணம், மது, நகைகள் மற்றும் பிற இலவசப் பொருட்களைக் கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் ஆகும்.  மேலும் பணமாக எவ்வளவு கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். சமீபத்தில் பஞ்சாப் சுற்றுலா பயணிகளிடம் இருந்து ரூ.69,400-ஐ தமிழக போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | டிடிவி தினகரன் மீது தேனியில் வழக்குப்பதிவு: போலீசார் நடவடிக்கை, காரணம் என்ன?

இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து விசாரணைக்கு பிறகு அவர்களிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பலரும் அச்சத்தில் உள்ளனர். எவ்வளவு பணத்தை கையில் கொண்டு செல்லலாம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.  இந்தச் சம்பவம் தேர்தல் நேரத்தில் பணம் மற்றும் பிற பொருட்களை எடுத்து செல்வது தொடர்பான விதிகளை மக்களுக்கு எடுத்து கூறி உள்ளது.  நமது சொந்த பணமாக இருந்தாலும் அதற்கான ஆதாரம் இல்லை என்றால் அந்த பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.  ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ரயில்வே நிலையம், விமான நிலையங்கள், முக்கிய இடங்களில் காவல்துறை, வருமான வரித் துறை மற்றும் பிற அமலாக்க அமைப்புகள் பணம், மதுபானம், நகைகள், போதைப்பொருள்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் கொண்டு சொல்லப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கிய இடங்களிலும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். இந்த பறக்கும் படையில் தலைவராக ஒரு மூத்த மாஜிஸ்திரேட், ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, ஒரு வீடியோகிராபர் மற்றும் மூன்று அல்லது நான்கு ஆயுதம் ஏந்திய போலீசார் நியமிக்கப்படுவது வழக்கம்.  தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி, ஒவ்வொரு குழுக்களுக்கு பிரத்யேக வாகனம், மொபைல் போன், வீடியோ கேமரா மற்றும் பணம் அல்லது பொருட்களை பறிமுதல் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் கொடுக்கப்படும். இந்த பறக்கும் படையினர் முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, முழு சோதனை செயல்முறையையும் மேற்கொள்ள அனுமதி உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தேர்தலுக்கு முந்தைய நாள் வரை சோதனை நடைபெறும்.  

பணம் எடுத்துச் செல்வதற்கான விதிகள் என்ன?

தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி, பெரிய மாநிலங்களில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் ரூ. 95 லட்சம் வரையிலும், சிறிய மாநிலங்களில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் ரூ. 75 லட்சம் வரையிலும் பிரச்சார செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மக்கள் தங்கள் கொண்டு செல்லும் பணம் அல்லது நகைக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.  எடுத்துக்காட்டாக, விமான நிலையத்தில் நீங்கள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் அல்லது 1 கிலோவுக்கும் அதிகமான நகைகளை எடுத்துச் சென்றால், உடனடியாக வருமான வரித் துறையிடம் இது குறித்து புகார் அளிக்கப்படும்.  இதற்கான முறையான ஆதாரங்களை நீங்கள் வழங்க வேண்டும். திருப்திகரமான விளக்கம் எதுவும் வழங்கப்படாவிட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும்.  

சாலைகளில் உலா கண்காணிப்புக் குழுக்களால் நடத்தப்படும் சோதனைகளில், ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான பணம் சிக்கினால் நீங்கள் முழு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். உங்களுக்கு ஏதேனும் கட்சியுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். மேலும் வருமான வரி சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.  அதே போல, வேட்பாளரை அல்லது அவரது முகவர் அல்லது கட்சித் தொண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில், ரொக்கமாக ரூ. 50000 அல்லது போதைப்பொருள், மதுபானம், ஆயுதங்கள், பரிசுப் பொருட்கள் இருந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்யப்படும்.

மேலும் படிக்க | பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News