சர்க்கரை வணிகத்துடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள், அதாவது செவ்வாய்கிழமைக்குள் உணவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தங்களிடம் உள்ள சர்க்கரை இருப்பு குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பவும் அத்தகைய வணிகர்களுக்கு அபராதம் மற்றும் தடை விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பு விபரங்களை இணையதளத்தில் தெரிவிக்க உத்தரவு


முன்னதாக, செப்டம்பர் 23 அன்று உணவு அமைச்சகம் சர்க்கரை வணிகத்துடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் தங்களிடம் உள்ள சரக்கு இருப்பு நிலையை வாரந்தோறும் அதன் இணையதளத்தில் தெரிவிக்க உத்தரவிட்டது. ஆனால், சர்க்கரை வர்த்தகம் மற்றும் சேமிப்பில் ஈடுபட்டுள்ள பல பங்குதாரர்கள் இன்னும் சர்க்கரை (Sugar) பங்கு மேலாண்மை அமைப்பில் தங்களை பதிவு செய்யவில்லை என்று அமைச்சகம் கண்டறிந்துள்ளது. சர்க்கரை பங்குதாரர்களில் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர்.


கணிசமான அளவு பதிவாகாத சர்க்கரை இருப்பு


சர்க்கரை மற்றும் தாவர எண்ணெய்கள் இயக்குநரகத்திற்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிபப்டையில், பல சட்டப்பூர்வ நிறுவனங்கள் கணிசமான அளவு பதிவாகாத சர்க்கரை இருப்புகளை வைத்துள்ளன என்று அமைச்சகம் அனைத்து பங்குதாரர்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. இது ஒழுங்குமுறை கட்டமைப்பை மீறுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்க்கரை சந்தை சமநிலையையும் சீர்குலைக்கிறது.


சந்தை தகவல் அமைப்பில் பதிவு


"எனவே, சர்க்கரைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து சட்டப்பூர்வ நிறுவனங்களும் சர்க்கரை சந்தை தகவல் அமைப்பில் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சர்க்கரை இருப்பு குறித்து தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது," என்று அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியது.


அரிசிக்கான ஏற்றுமதி வரி


சுமூகமான வர்த்தகத்திற்காக தற்போதுள்ள 20% வரிக்கு பதிலாக பச்சை அரிசிக்கு டன்னுக்கு 80 டாலர் ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும் என அரிசி ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜூலை மாதம் வெள்ளை அரிசிக்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யவும், பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக குறைக்க வேண்டும் என்றும் இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


மேலும் படிக்க | நீங்களும் கோடீஸ்வாரர் ஆகலாம்... உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் இங்கே!


 உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை


இம்மாதம் துவங்கிய 2023-24 சீசனில் உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் விலையை கட்டுக்குள் வைத்திருக்க சர்க்கரை இருப்புக்களை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தியா விரைவில் சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதன் தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. உலகில் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கும் நிலையில், சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்தால் உலகளவில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது.


இந்திய சர்க்கரை உற்பத்தி


சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தி அளவானது இந்திய சர்க்கரை உற்பத்தி அடிப்படையில் கணிக்கப்படும் நிலையில், வரும் அக்டோபர் தொடங்கி செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தி 1.21 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.1 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | Business Idea: எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் லட்சங்களை அள்ளலாம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ