No Sugar Diet: நீங்கள் நோ சுகர் டயட்டை பின்பற்றுகிறீர்களா? அல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படி என்றால் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை (Sugar) அளவை குறைப்பது டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எடை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களில் சர்க்கரையும் ஒன்று என்பதால் இதை குறைப்பது எடை இழப்புக்கு (Weight Loss) உதவும். உங்கள் பல் ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்கள் அனுபவிக்கலாம். ஆனால் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆரோக்கியமானதல்ல. இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சர்க்கரை இல்லாத உணவு முறை அதாவது நோ சுகர் டயட்டை பின்பற்றும் போது, எந்தத் தீங்கும் விளைவிக்காத பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இயற்கை சர்க்கரையை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நோ சுகர் டயட்: உங்கள் டயட்டில் எந்தெந்த உணவுகள் இருக்கலாம், எவை இருக்கக்கூடாது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், புரதம், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள், பால் மற்றும் பால் மாற்று உணவு வகைகள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். எவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
கூடுதல் சர்க்கரை: நோ சுகர் உணவுமுறையை பின்பற்றினால், கூடுதல் சர்க்கரையைக் கொண்ட உணவுகள் மற்றும் பானங்களை நீக்குவது அல்லது குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் சோடா, பழச்சாறுகள், எனர்ஜி ட்ரிங்குகள் மற்றும் சர்க்கரை போட்ட காபி அல்லது தேநீர் போன்ற பானங்கள் அடங்கும்.
இனிப்பு வகைகள்: மிட்டாய், குக்கீகள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், ஐஸ்கிரீம் மற்றும் பிற சர்க்கரை கலந்த இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் சர்க்கரை சேர்க்க விரும்பினால், சுகர் ஃப்ரீ அல்லது இயற்கையாகவே இனிப்பான மாற்றுகளைத் தேர்வு செய்யவும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், காண்டிமென்ட்கள் மற்றும் சாலட் டிரஸ்ஸிங்ஸ் உட்பட பல பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் கூடுதல் சர்க்கரையைக் கொண்டிருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் தின்பண்டங்கள், துரித உணவு, உறைந்த உணவுகள், மிட்டாய், கேக் மற்றும் குக்கீகள் ஆகியவை அடங்கும்.
வெள்ளை ரொட்டி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்: வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். முழு தானியங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும்.
இனிப்பான காலை வேளை சீரியல்கள்: பெரும்பாலான காலை உணவு சீரியல்களில் கூடுதல் சர்க்கரை அதிகம் உள்ளன. இவற்றை சாப்பிட எண்ணும் நபர்கள் சர்க்கரை இல்லாத சீரியல்களை தேர்ந்தெடுத்து, இதில் இனிப்பை சேர்க்க பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
பழச்சாறுகள்: பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. முழு பழங்களும் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அவை நார்ச்சத்தை வழங்குகின்றன. இது சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: தொத்திறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற சில பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், கூடுதல் சர்க்கரையைக் கொண்டிருக்கலாம். பதப்படுத்தப்படாத இறைச்சிகள் அல்லது சர்க்கரை சேர்க்கைகள் இல்லாத இறைச்சிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.