தற்போது மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது மின்சார பேட்டரி கொண்ட இரு சக்கர வாகனங்களை மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர இ-ரிக்ஷாக்கள் எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ளன. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மின்சார வாகனங்களை தற்போது அதிகம் பார்க்கலாம். மின்சாரபேட்டரி மூலம் இயங்கும் அவற்றை இயக்க மின்சார சார்ஜிங் பாயிண்டுகள் தேவை. அத்தகைய சூழ்நிலையில், சார்ஜிங் நிலையத்தைத் திறப்பதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. அதே நேரத்தில், சிஎன்ஜியின் விலையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், செலவு மிகவும் குறைவு என்பதால், மின்சார வாகனங்கள் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதை இயக்குவதற்கு மக்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை ஒரு கிலோமீட்டருக்கு 1 ரூபாய் என்ற அளவில் மட்டுமே செலவும் என்பதால், மக்கள் இதனை அதிகம் விரும்புகிறார்கள். எனவே, கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமங்களில் ஏராளமான இ-ரிக்ஷாக்கள் உள்ளன.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தின் (EV சார்ஜிங் நிலையம்) வணிகத்தைத் தொடங்கலாம். இந்த வியாபாரம் (Business Idea) செழித்து வருகிறது. மின்சார வாகனம் ஓட்டும் போது மாசு ஏற்படாது என்பதால், அரசாங்கமும் இதைஅ வாங்க மானியங்கள் அளித்து ஊக்குவித்து வருகிறது. மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையத்தைத் தொடங்க, சாலையோரத்தில் 50 முதல் 100 சதுர மீட்டர் பரப்பளவில் காலியாக இருக்க வேண்டும். இந்த காலி இடம் உங்கள் பெயரில் இருக்கலாம் அல்லது 10 வருட குத்தகையில் இருக்கலாம்.
எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் தொழிலை எப்படி தொடங்குவது?
மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க பல இடங்களில் அனுமதி பெற வேண்டியுள்ளது. வனத் துறை, தீயணைப்புத் துறை மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷனிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும். சார்ஜிங் ஸ்டேஷனில் கார்களை நிறுத்துவதற்கும், அவை நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் முறையான ஏற்பாடு இருக்க வேண்டும். இதனுடன், சார்ஜிங் ஸ்டேஷனில் சுத்தமான குடிநீர், கழிப்பறை, ஓய்வு அறை, தீயணைப்பான், காற்றோட்ட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். ஒரு EV சார்ஜிங் நிலையத்தை நிறுவ 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அது அவரவர் அமைக்கும் எலக்ட்ரிக் ஸ்டேஷனின் சார்ஜிங் திறனை பொறுத்தது. குறைந்த திறன் கொண்ட சார்ஜிங் நிலையத்தை நிறுவ ரூ.15 லட்சம் வரை செலவாகும். நிலம் முதல் சார்ஜிங் பாயிண்ட் நிறுவுதல் வரையிலான செலவுகள் இதில் அடங்கும்.
மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையத்திலிருந்து எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
3000 கிலோவாட் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவப்பட்டால், ஒரு கிலோவாட்டிற்கு 2.5 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன்படி ஒரு நாளில் 7500 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம். ஒரு மாதத்தில் ரூ.2.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அனைத்து செலவுகளையும் சந்தித்த பிறகு, இங்கே எளிதாக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.75 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இருப்பினும், சார்ஜிங் ஸ்டேஷனின் திறனை அதிகப்படுத்தினால், இந்த வருமானம் மாதத்திற்கு ரூ.10 லட்சத்தை எட்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ