Flight Ticket Offer: வெறும் ரூ.100-ல் விமான பயணம், ரூ.50 லட்சம் மதிப்பிலான நன்மைகள், முந்துங்கள்!!
Cheapest Air Tickets: வெறும் ரூ. 100-இல் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? ஐஆர்சிடிசி உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.
ஐஆர்சிடிசி விமான டிக்கெட் முன்பதிவு: விமானத்தில் பயணம் செய்ய திட்டம் உள்ளதா? அப்படி ஒரு திட்டம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானதுதான். இப்போது நீங்கள் மிகக் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்யலாம். ஐஆர்சிடிசி மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல நல்ல சலுகைகளை பெறலாம். இங்கு நீங்கள் வெறும் 100 ரூபாய்க்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அதே போல் இந்த சலுகைகளின் கீழ் 50 லட்ச ரூபாய் காப்பீட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகைகள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்த வழியில் சலுகையின் பலனைப் பெறலாம்
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஐஆர்சிடிசி ஏர் ஆப் (IRCTC Air App) மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல நன்மைகளைப் பெறுவீர்கள். ஐஆர்சிடிசி ஏர் இணையதளத்தின்படி, நீங்கள் எஸ்பிஐ கார்டு பிரீமியர் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தினால், அதன் மதிப்பில் 5%-ஐ திரும்பப் பெறுவீர்கள். இது தவிர, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டில் பணம் செலுத்தி விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், 7% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஜூலை 30 வரை மட்டுமே. அதே நேரத்தில், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் புதன்கிழமைகளில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | மத்திய அரசு வேலையில் சேர வாய்ப்பு - தேர்வு எதுவும் கிடையாது
முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
- ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ. 59 கன்வீனியன்ஸ் ஃபீஸ் விதிக்கப்படுகிறது.
- ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், 50 லட்சம் வரையிலான இலவச பயணக் காப்பீட்டு வசதியைப் பெறுவீர்கள்.
- ஐஆர்சிடிசி பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
- எல்டிசி டிக்கெட் முன்பதிவுக்காக தனித்தனியாக அரசு சான்றளிக்கப்பட்ட நிறுவனம் உள்ளது.
- ஐஆர்சிடிசி சிறப்பு பாதுகாப்பு கட்டணத்திலும் தள்ளுபடி வழங்குகிறது.
விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?
- டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, முதலில் https://www.air.irctc.co.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
- பின்னர் உங்கள் ஐஆர்சிடிசி ஐடி-யில் லாக் இன் செய்யவும்.
- அதன் பிறகு புறப்படும் மற்றும் சென்று சேரும் இடங்களை நிரப்பவும்.
- இதற்குப் பிறகு, சலுகைகளைச் சரிபார்த்த பிறகு, கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு உங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்.
மேலும் படிக்க | IRCTC-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..டிகிரி முடித்திருந்தால் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ