பிபிஎஃப் கணக்கு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி! குறைந்த வட்டிக்கு கடன் வாங்க நல்ல வழி
Cheapest Interest On Loan: மிகக்குறைந்த வட்டியில் கடன் தரும் PPF கடன் தொடர்பாக சில முக்கிய விஷயங்களை தெரிந்துக் கொள்வோம்.
புதுடெல்லி: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், அருமையான வருமான முதலீட்டு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் , நிலையான சேமிப்புத் திட்டம் என்றும் சொல்லலலம். முதலீடு செய்யக் நல்வாய்ப்பாக இருக்கும் இந்தத் திட்டத்தில்நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து சேமிக்க உதவுகிறது.
இந்த சேமிப்பானது, நமது ஓய்வூதியத்திற்காக பயன்படுத்தலாம் என்றாலும், செலவுகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டால், வெளியில் கடன் பெறுவதை விட PPF கணக்கில் கடனை வாங்குவது சுலபமானது. கடன் பெறுவது மட்டுமல்ல வட்டியும் மிகவும் குறைவானது தான் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
எவ்வளவு சீக்கிரம் நீங்கள் பிபிஎஃப்-இல் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். 25 வயதான ஒரு நபர், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயை பிபிஎஃப்பில் முதலீடு செய்தால், அவர் ஓய்வு பெறும்போது அவரது கணக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான தொகை இருக்கும்.
பிபிஎஃப் வட்டி
மாதாந்திர அடிப்படையில் PPF கணக்கில் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்தப் பணம் நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். பிபிஎஃப்-ல் பணத்தை டெபாசிட் செய்ய நிலையான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் உங்கள் வசதிக்கு ஏற்ப பணத்தை டெபாசிட் செய்யலாம்.
பிபிஎஃப் மீதான வட்டி கணக்கீடு ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதி வரை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அவசரத் தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டால், அதிலிருந்து பகுதியளவு திரும்பப் பெறலாம் என்றாலும், இந்த சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்து ஆறு வருடங்கள் முடிவடைந்த பிறகே, பணத்தை திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பிபிஎஃப் கடன் என்பதும் அதற்கு மிகவும் குறைவான வட்டி என்பதும் பேசுபொருளாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இது உண்மைதான். பிபிஎஃப் கணக்கில் உள்ள உங்கள் பணத்த்தை ஆறு வருடங்களுக்கு முன் திரும்பப்பெற முடியாது என்றாலும் அதற்கு முன்பு பணம் தேவைப்பட்டால், PPF கணக்கின் மீது கடன் பெறலாம்.
பிபிஎஃப் கணக்கின் மீது நீங்கள் பெறும் கடனுக்கு 1% வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனின் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 36 மாதங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கிய தொகையை அதாவது, அசல் தொகையை செலுத்திய பிறகு, வட்டியை ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் செலுத்தலாம்.
ஆனால், பிபிஎஃப் கடனை 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 36 மாதங்களில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், PPF வட்டி விகிதம் ஆறு சதவிகிதமாக அதிகரித்துவிடும். அதேபோல, கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை, பிபிஎஃப் கணக்கில் இருக்கும் தொகைக்கு எந்த வட்டி வருமானமும் கொடுக்கப்படாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | SCSS: சீனியர் சிட்டிசன்களுக்கு வரிச் சலுகையுடன் கூடிய சிறப்பான ஓய்வூதியத் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ