நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் (PPF) முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசாங்கம் அடுத்த ஓரிரு நாட்களில் PPF இன் வட்டி விகிதத்தை அதிகரிக்கக்கூடும் எனத்தகவல். பிபிஎஃப் மீதான வட்டியை டிசம்பர் 31, 2022க்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை தற்போது உள்ள வட்டியில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை PPF-க்கு வழங்கப்படும் வட்டி விகிதம், அடுத்த ஒரு காலாண்டில் அதாவது புத்தாண்டின் முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதே வட்டி விகிதம் தான் கிடைக்கும். தற்போது, PPFக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
PPF வட்டி விகிதம் உயரும்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன் பிறகு பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், PPF உடன் ஒப்பிடும்போது, வங்கி FD சேமிப்புக்கு குறிப்பிடத்தக்க வட்டியை அளிக்கிறது. இதனால்தான் பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பிபிஎஃப்-ல் பெறப்படும் வட்டி FD-ஐ விட அதிகமாக உள்ளது.
இன்று கடைசி நாள்-PPF வட்டி விகிதம் அதிகரிக்குமா?
ஒவ்வொரு காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு PPF இன் வட்டி விகிதங்களைத் திருத்தம் செய்கிறது. அதன் அடிப்படையில் பிபிஎஃப் வட்டி விகிதத்தில் அடுத்த திருத்தம் இந்த மாத இறுதியில் (டிசம்பர் 31) செய்யப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அடுத்த முதல் காலாண்டில் பொருந்தக்கூடிய பிபிஎஃப் வட்டி விகிதம் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு இருந்தது. அதன் பிறகு வங்கிக் கடன்கள் வட்டி விலை விகிதம் உயர்ந்தது. அதேபோல சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியும் அதிகரித்தது. ஆனால் இதற்குப் பிறகும், பிபிஎஃப் உள்ளிட்ட பல அரசு சேமிப்புத் திட்டங்களில் இன்னும் வட்டி விகிதம் அதிகரிக்கவில்லை.
தற்போது PPF-க்கு எவ்வளவு வட்டி கிடைக்கிறது?
செப்டம்பர் 2018 இல், PPF மீதான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக இருந்தது. இது ஜூன் 2019 இல் 8 சதவீதமாக இருந்தது. ஆனால் திடீரென மத்திய அரசு பிபிஎஃப் மீதான வட்டியை குறைத்தது. அதன்பின்னர் வீழ்ச்சியடையத் தொடங்கிய வட்டி விகிதம், தற்போது PPF மீதான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. மறுபுறம், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் சாமானிய மக்களுக்கு எஃப்டிக்கு 8% வரை வட்டி கொடுக்கின்றன. அதே நேரத்தில், சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு FD களில் 9 சதவீதம் வரை வட்டி கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ