நடுத்தர வர்க்கத்தினர் கனவுகளை நிறைவேற்ற பெரிதும் நம்பி இருப்பது சிறு சேமிப்பு திட்டங்கள். சேமிப்பு என்பது மிகவும் அவசியம். சமூகத்தில் மதிப்பும், புகழும் வேண்டும் என்றால் அதற்கு பணம் அவசியம் என்பதை மறுக்க முடியாது. நம்மிடம் ஏதாவது ஒரு இக்கட்டான சூழலில் பணம் இல்லையென்றால் அப்போது உதவுவது நாம் சேமித்து வைத்திருக்கும் பணமே. குழந்தைகளின் கல்வி, எதிர்கால பாதுகாப்பு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டாலோ, உறவுகளில் ஏதேனும் விஷேஷம் நடந்தாலோ என பல விஷயங்களுக்கும் பணம் மிகவும் முக்கியம். அதிலும் பணத்தை சேமிப்பதை விட, சேமித்த பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.  இந்நிலையில், அரசு சிறு சேமிப்பு திட்ட விதிகளில் செய்துள மாற்றங்களை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உட்பட பல சிறு சேமிப்பு விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. இது முதலீட்டாளர்களை மேலும் கவர்ந்துள்ளது. புதிய விதிகளின்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தைத் திறக்க இப்போது உங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் கிடைக்கும். முன்னதாக,  ஒரு மாத காலம் மட்டுமே இருந்தது. இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் 9ஆம் தேதி அரசு வெளியிட்டது. இனி, ஒருவர் ஓய்வு பெறும் போது பெறும் பணத்தை மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்குள் முதலீடு செய்யலாம். இந்த நேரத்தில், அவர் தனது கணக்கில் ஓய்வூதிய பணம் வந்த தேதிக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கான வட்டி விகிதம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் முதிர்வு தேதியில் உள்ள வட்டி விகிதத்தின் படி இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஜாக்கிரதை! கார் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்!


PPF இலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்


PPF கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கான விதிகளையும் அரசாங்கம் மாற்றியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த மாற்றங்கள் பொது வருங்கால வைப்பு நிதி (திருத்தம்) திட்டம், 2023 என்று பெயரிடப்பட்டுள்ளன. இதில், தேசிய சேமிப்பு நேர வைப்புத் திட்டத்தில் முன்கூட்டியே பணம் எடுக்கப்பட்டுவதற்கான விதிகளில், முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்த கணக்கிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணம் எடுக்கப்பட்டால், அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் அதற்குப் பொருந்தும் என்று  புதிய விதி கூறுகிறது.


மொத்தம் 9 சிறு சேமிப்பு திட்டங்கள்


தற்போது, ​​ஐந்தாண்டு டெபாசிட் கணக்கு துவங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டால், மூன்று ஆண்டு கால வைப்பு கணக்கின் வட்டி விகிதம் அதற்கு பொருந்தும் என்பது விதி. சிறு சேமிப்புக் கணக்குகள் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. தற்போது, ​​அரசு 9 வகையான சிறுசேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தொடர் வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (SSY), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும்.


மேலும் படிக்க | முந்துங்கள் மக்களே... நாளையுடன் முடிகிறது தள்ளுபடி - அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அள்ளுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ