புதுடெல்லி: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .291 குறைந்து ரூ .44,059 ஆக உள்ளது. எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் இந்த தகவலை வழங்கிய தகவலின் அடிப்படையில், நேற்றைய இறுதி வர்த்தக அமர்வில், தங்கம் 10 கிராமுக்கு ரூ .44,350 ஆக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பி.டி.ஐ செய்தியின்படி, வெள்ளியின் விலை ரூ .1,096 குறைந்து கிலோ ஒன்றுக்கு 65,958 ஆக உள்ளது. வியாழன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு 67,054 ரூபாய் என்ற அளவில் இருந்தது.


சர்வதேச அளவில் அமெரிக்க டாலரில் ஏற்படும் உயர்வு, தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது.  வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 20 பைசா அதிகரித்து 72.71 ஆக இருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில், தங்கம் ஒரு அவுன்ஸ் 1,707 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் 25.67 டாலராகவும் குறைந்தது.  


Also Read | முதல் T20I தோல்விக்கு விராட் கோலி சொல்லும் காரணம் என்ன தெரியுமா?


2019, 2020இல் அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிக அதிகமான விலையை எட்டிய தங்கம், 20% அளவு விலை குறைந்துள்ளது சுமார் 12,000 ரூபாய் குறைந்தது


தங்கத்தின் தற்போதைய ஸ்பாட் விலை (ஜிஎஸ்டி இல்லாமல்)


தூய்மையான தங்கத்தின் விலை (ரூபாய் / 10 கிராம்)
24 காரட் 44332
22 காரட் 40608
18 காரட் 33249


Also Read | Bank Strike: இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது


தங்கமும் வெள்ளியும் ஏன் விலை வீழ்ச்சியை சந்திக்கின்றன தெரியுமா?  


தங்கத்திற்கான தேவை குறைந்தது
தங்கத்தில் முதலீடு செய்வதும் குறைந்திருக்கிறது.  
கிரிப்டோ நாணயத்தில் அதிக முதலீடு செய்வதால் தங்கத்தின் மீதான முதலீடு  குறைந்துள்ளது.  


Also Read | புத்தராக அவதாரம் எடுத்திருக்கும் Donald Trump ‘சிலைகள்’ஆன்லைனில் Trending


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR