Bank Strike: இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதை அடுத்து, இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2021, 08:31 AM IST
  • இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது
  • திங்கள், செவ்வாய் இரு நாட்களின் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
  • வார இறுதி நாட்களுடன் சேர்த்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடக்கம்
Bank Strike: இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது   title=

புதுடெல்லி: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதை அடுத்து, இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், இன்று விடுமுறை, நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என 2 வார இறுதி நாட்களுடன், 2 நாட்கள் வேலைநிறுத்தமும் சேர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது. இதனால் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் முடங்கின.

Also Read | எந்த வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.. Top 10 வங்கிகளின் பட்டியல்!

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கிகள் அறிவித்திருந்தன.

அதன்படி, மார்ச்15, 16 என இரு நாட்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் (Bank Unions)  அறிவித்துள்ளன.
இதையடுத்து பொதுத் துறை வங்கிகளளின் செயல்பாடுகள் 4 நாட்களுக்கு இருக்காது.  

Also Read | Ind Vs Eng T20I: முதல் T20I தோல்விக்கு விராட் கோலி சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News