சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாமல் க்ரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வழிகள்!
ஒருவர் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஒரு க்ரெடிட் கார்டை க்ளோஸ் செய்வதால் அவரது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
பெரும்பாலான மக்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடங்கிவிட்டனர். மொபைல் செயலிகள் மூலமாக பணம் செலுத்துவது, க்ரெடிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்துவது தற்போது அதிகமாகி விட்டது. அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாகவும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகள் அனைத்தும் கிரெடிட் பயன்படுத்துபவர்களுக்கு பலவிதமான ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் போன்றவற்றை வழங்குகின்றன. அதேசமயம் பல க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது நல்லதல்ல, அதனால் அதிகளவில் கார்டுகள் வைத்துக்கொள்ளாமல் சில கிரெடிட் கார்டுகளை க்ளோஸ் செய்வது உங்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தாது. ஒருவர் பெறக்கூடிய கடன் தொகையை க்ரெடிட் கார்டு காட்டுகிறது, அதனால் க்ரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது நீங்கள் குறைவாக பணத்தை செலவு செய்ய விரும்புகிறீர்கள் என காட்டுகிறது.
மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!
ஒரே க்ரெடிட் கார்டை மட்டும் பயனபடுத்துபவர்கள் அதனை ரத்து செய்ய விரும்பினால் க்ரெடிட் கார்டு சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது. க்ரெடிட் கார்டு கணக்கை க்ளோஸ் செய்யும்போது அந்தக் கணக்கில் இருக்கும் கிரெடிட் வரம்பை நாம் இழக்க நேரிடும், இது சியூஆர் அல்லது கடன் அதிகரிப்பின் சதவீதத்தை உருவாக்குகிறது, அதோடு அதிக அளவு கிரெடிட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. மேலும் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஒரு கார்டை க்ளோஸ் செய்வதால் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அந்த பழைய கார்டை பயன்படுத்தும் போது நீங்கள் பணத்தை சரியான நேரத்தில் செலுத்தி உங்கள் சிபில் ஸ்கோரை நல்ல நிலையில் வைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் க்ரெடிட் கார்டை க்ளோஸ் செய்வதால் உங்களின் சிபில் ஸ்கோர் ஹிஸ்டரி முழுவதும் டெலீட் செய்யப்பட்டு புதிய சிபில் ஸ்கோர் உருவாகும் என்று கூறப்படுகிறது.
இப்போது ஒருவர் இரண்டு க்ரெடிட் கார்டுகளை வைத்திருக்கிறார், அந்த இரண்டு க்ரெடிட் கார்டுகளின் வரம்பும் தலா ரூ. 1 லட்சம் என வைத்துக்கொள்வோம், அதில் அவர் ரூ. 50,000-ஐ கார்டுகளில் ஒன்றை ஸ்வைப் செய்கிறார். அதாவது ரூ.2 லட்சத்தில் ரூ.50,000 செலவு செய்துள்ளார், சியூஆர்-ஐ 25 சதவீதமாக மாற்றும். இதனை நல்ல சியூஆர் என்று சொல்லலாம். இப்போது, அவர் க்ரெடிட் கார்டில் ஒன்றை க்ளோஸ் செய்யும்போது அது சியூஆர்-ஐ 50 சதவீதமாக அதிகரிக்கிறது. ஒருவர் ஏற்கனவே வைத்திருக்கும் க்ரெடிட் கார்டில் குறைவாக செலவு செய்வதன் மூலமோ அல்லது செலவை அதிகரிக்க வங்கியை கேட்பதன் மூலமோ கடன் தொகையை அதிகரிக்கலாம். உங்கள் சிபில் ஸ்கோரை ஒரே நிலையில் வைத்துக்கொள்ள உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை வேறொரு கிரெடிட் கார்டுக்கு மாற்றலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ