Pakistan Economic Crisis: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு மின்சாரத் திருட்டு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மின்சாரத் திருட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் 600 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என பாகிஸ்தான் மின்சாரத் துறை அமைச்சர் அவாய்ஸ் லெகாரி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று, பாகிஸ்தானிடம் 6000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் இருந்ததாகவும், ஆனால் அது வழங்கப்படவில்லை என்றும் எரிசக்தி அமைச்சர் அவாய்ஸ் லெகாரி கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் நாட்டின் கருவூலத்திற்கு சுமார் 2 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் மின்சாரத் திருட்டு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


ஆறாயிரம் மெகாவாட் கூடுதல் மின்சாரம்


மின்சாரம் விநியோகிக்கும் ஃபீடர்களில் மீட்டர் இல்லாததால், மின்சாரம் திருடப்படும் என்பதால், 6000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை நாங்கள் வேண்டுமென்றே வழங்கவில்லை என்று ஜியோ செய்திக்கு அளித்த பேட்டியில் அவாய்ஸ் லெகாரி கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பாகிஸ்தான் அரசிடம் இருந்த மின்சாரத்தை வழங்கினால், மீட்டர் பொருத்தப்பட்ட நுகர்வோர் தலையில் இந்த பணம் சுமையாக மாறும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.


மின் திருட்டை தடுப்பது பெரிய தலைவலியாக மாறியுள்ளதாகவும், கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் சிந்து ஆகிய மாநிலங்களில் மின்சாரத் திருட்டைத் தடுக்க பாகிஸ்தான் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக பாகிஸ்தான் மத்திய அமைச்சர் லெகாரி தெரிவித்தார்.


மேலும் படிக்க | வரி கணக்கீடு தாக்கல்களில் AI தொழில்நுட்ப பயன்பாடு? நல்லதா கெட்டதா?


மின் திருட்டு அதிகமாக நடக்கும் இடங்கள்


"மின்சாரத் திருட்டினால் ஆண்டுக்கு 600 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நாங்கள் அதை எப்படியும் தடுத்து நிறுத்துவோம், அரசியல் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்" என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் இந்த விஷயத்தில் இணைந்து செயல்பட வேண்டியது கடமை என்று அவர் கூறுகிறார்.


பஞ்சாம் மாநிலாரசின் உதவிகளை குறிப்பிட்டு பேசிய அவாய்ஸ் லெகாரி, பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம் (PESCO) மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் 137 பில்லியன் இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பெஷாவர் மின்சார விநியோக நிறுவனம், முன்பு நீர் மற்றும் மின் மேம்பாட்டு ஆணையத்தின் பவர் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த நிறுவனம் பெஷாவரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெஸ்கோவிற்குக் ஆண்டுதோறும் மின்சாரத் திருட்டால் பெரிய அளவில் பண இழப்பு ஏற்படுகிறது.


பஞ்சாப் மாகாணத்தில் ரூ.133 பில்லியன் மதிப்புள்ள மின்சாரமும், பலுசிஸ்தானில் ரூ.100 பில்லியன் மதிப்புள்ள மின்சாரமும் திருடப்படுகிறது. பெஷாவர், மர்தான், தேரா இஸ்மாயில் கான், நவ்ஷேரா மற்றும் சர்சத்தா ஆகிய இடங்களில் ரூ.65 பில்லியன் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில், மின்சாரத் திருட்டு அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


மேலும் படிக்க | ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ