LIC ஊழியர்களுக்கு மே 10 முதல் உற்சாகம் கூடும். ஆம்! இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஊழியர்களுக்கு மத்திய அரசு வாரந்தோறும் சனிக்கிழமையை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது இனிமேல், LIC வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை என 5 நாட்கள் மட்டுமே இயங்கும்.
2021 ஏப்ரல் 15 மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.


இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இது எல்.ஐ.சி ஊழியர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தியாக வந்திருக்கிறது. இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.  


Also Read | 7th Pay Commission: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்ன மாற்றம்? 


"அனைத்து பாலிசிதாரர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் மே 10, எல்.ஐ.சியின் அனைத்து அலுவலகங்களும் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது" என்று எல்.ஐ.சி வெளியிட்ட பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"மே 10, 2021 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை இருக்கும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


சனிக்கிழமையன்று எல்.ஐ.சியின் கிளைகள் எதுவும் இயங்காது. 1881ஆம் ஆண்டின் Negotiable Instruments Act சட்டத்தை திருத்திய மத்திய அரசு வாரம் 5 நாள் வேலை நாளாக அறிவித்தது.


Also Read | Covid Update: தமிழகத்தில் இன்று (மே,09) 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு, பலி 236
 
எல்.ஐ.சியின் இந்த முடிவால் 1.14 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள்.  சனிக்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்குமாறு எல்.ஐ.சி ஊழியர்கள் நீண்ட காலமாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன் வைத்து முடிவுக்காக காத்திருந்தனர்.


அதேபோல், அனைத்து எல்.ஐ.சி ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வை அரசாங்கம் இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உயர்வு 15-16% வரை இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. 20% ஊதிய உயர்வு இருக்கலாம் என்றும் சிலர் நம்புகின்றனர். எல்.ஐ.சியில் பணி புரியும் 1.14 லட்சம் ஊழியர்கள் ஊதிய உயர்வால் பயனடைவார்கள்.


வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு ஏற்ப எல்.ஐ.சியின் ஊதிய உயர்வும் புரிந்து கொள்ளப்படுகிறது, இது வங்கி தொழிற்சங்கங்களுக்கும் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தத்தை பின்பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது.  


Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR