நீங்கள் மாத சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்து, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாதமும் பங்களிக்கிறீர்கள் என்றால், இபிஎஃப்ஓ -​​இன் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது இபிஎஃப்ஓ வழங்கும் வசதி. இதன் மூலம் உங்கள் பிஎஃப் பங்களிப்பை அதிகரிக்க முடியும். விபிஎஃப் -லும் நீங்கள் இபிஎஃப் அளவிலான வட்டியைப் பெறலாம். இபிஎஃப் -இல், ஊழியர் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% வரை பங்களிக்க முடியும். ஆனால் விபிஎஃப் -இல் அத்தகைய வரம்பு இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர் அடிப்படை சம்பளத்தில் 100% வரை கூட பங்களிக்க முடியும். மேலும் நீண்ட காலத்திற்கு கணிசமான கார்பஸ் சேர்க்க முடியும். நீங்கள் ஏற்கனவே விபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து இருந்தால் அல்லது அதில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் கணக்கைத் தொடங்கியவுடன், எவ்வளவு காலத்திற்குப் பிறகு இந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியும் என்பது பற்றியும், இதன் செயல்முறை என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


5 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது


விபிஎஃப் -இன் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதில் இருந்து பகுதியளவு தொகையை எடுக்க உங்களுக்கு வசதி வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் எடுக்கப்பட்டால், வரி விதிக்கப்படாது. ஆனால், நீங்கள் விபிஎஃப் -ல் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையையும் திரும்பப் பெற விரும்பினால், இபிஎஃப் -க்கும் பொருந்தும் அதே விதி இதற்கும் பொருந்தும். ஊழியர் ஓய்வு பெறும்போது அல்லது தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும்போது, ​​அப்போது ஊழியர் விபிஎஃப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் க்ளெய்ம் செய்யலாம்.


மேலும் படிக்க | EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த பெரிய அப்டேட்


பணத்தை திரும்ப எடுக்கும் முறை


விபிஎஃப் -லிருந்து பணத்தை எடுக்க, யுஏஎன் போர்ட்டலில் லாக் இன் செய்தோ அல்லது மொபைலில் உமங் செயலியைப் பதிவிறக்கம் செய்தோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால் இதற்கு உங்கள் UAN எண் ஆக்டிவேட் ஆகி இருப்பது மிகவும் முக்கியம். மேலும், ஆதார் எண்ணை UAN எண்ணுடன் இணைக்க வேண்டும். மேலும் பேன் எண் மற்றும் கணக்கு எண்ணையும் பிஎஃப் உடன் இணைக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் போது, ​​க்ளெயிம் படிவத்தில் பெயர், முகவரி, பிஎஃப் கணக்கு எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அத்துடன் வங்கிக் கணக்கின் காசோலை அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலையும் பதிவேற்ற வேண்டும். அனைத்து செயல்முறைகளும் முடிந்த பிறகு, உங்கள் நிதி பரிமாற்றத்திற்கான செயல்முறை தொடங்கும். அதன் பின் சில நாட்களில் உங்கள் பணம் உங்கள் கணக்கில் வந்து சேரும்.


பிபிஎஃப் திட்டம்


பிபிஎஃப் (PPF - Public Provident Fund) திட்டம் மத்திய அரசின் கீழ் உள்ளது. இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். அது 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். மத்திய அரசு பிபிஎஃப் மூலம் எளிய மக்களுக்கு முதலீடு மற்றும் சேமிப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. இதனுடன், பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது பிபிஎஃப் மூலம் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | PPF -ல் பணம் போடுகிறீர்களா? உங்களுக்கு தான் இந்த முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ