EPFO Update: PF சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு செய்தி மிக பயனுள்ளதாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அரசு அமைப்பாகும். EPFO, நமது நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணி ஒய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக இபிஎஃப் தொகை (EPF Amount) பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் பணி ஓய்வில் மிகப்பெரிய கார்ப்பஸ் தொகையும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) கிடைகின்றது. இது ஓய்வூதியதாரர்கள் தங்கள் பணி ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.


EPFO அளித்த தகவல்


EPFO அதன் கீழ் உள்ள அனைத்து இபிஎஃப் சந்தாதாரர்களுக்கும் (EPF Subscribers) ஒரு முக்கியமான, அவசியமான தகவலை வெளியிட்டுள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களை தங்கள் இபிஎஃப் கணக்கின் (EPF Account) UAN எண் மற்றும் கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால், அவர்கள் இணைய மோசடிகளை (Cyber Fraud) எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் EPFO தெரிவித்துள்ளது.


இபிஎஃப்ஓ எச்சரிக்கை (EPFO Warning):


- இபிஎஃப் உறுப்பினர்கள் EPFO ​​இணையதளத்திற்குச் சென்றவுடனேயே இந்த எச்சரிக்கையை காண முடிகின்றது.


- EPFO இணையதளத்திற்கு சென்றவுடன், ​​ஒரு பெரிய பாப்-அப் பாக்ஸ் திறக்கிறது. 


- இந்த பாப்-அப் பெட்டியில், ஊழியர்களுக்கு EPFO ​​ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 


- இந்த எச்சரிக்கை செய்தியில், “உங்கள் நுழைவுத் தகவல்கள் (யுஏஎன் மற்றும் கடவுச்சொல்) தொடர்பான திருட்டு / இழப்பு குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இது இணைய மோசடிக்கு வழிவகுக்கும்." என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | PPF, SSY, SCSS... அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய மாற்றம்


யுஏஎன் எண் மற்றும் கடவுச்சொல் மூலம் நடக்கும் சைபர் மோசடி


இபிஎஃப் உறுப்பினர்களின் UAN மற்றும் கடவுச்சொல் மூலமே அவர்கள் ஏமாற்றப்படலாம் என்பதே EPFO விடுத்துள்ள எச்சரிக்கையின் பொருளாகும். ஆகையால், பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் EPF கணக்கின் பாஸ்வர்டுடன் இனி தங்கள் UAN எண்ணையும் சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட சாதனங்களில் மட்டுமே தங்கள் EPF கணக்கை அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


இணைய மோசடிகளைத் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி EPFO கூறியுள்ள விஷயங்கள்


- ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இணைய மோசடிகளைத் தவிர்ப்பதற்காக சில மிக முக்கியமான நடவடிக்கைகளை ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளது. 
- உரிமம் பெற்ற ஆண்ட்டி வைரஸ்/மால்வேர்களை தங்கள் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் நிறுவுமாறு ஊழியர்களுக்கு EPFO அறிவுறுத்தியுள்ளது. 
- சாதனத்தை எப்போதும் அப்டேட் செய்து பேட்ச் செய்து வைத்திருக்குமாறு EPFO தெரிவித்துள்ளது. 
- EPF கணக்கிற்கு சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்குமாறு EPFO ​​அறிவுறுத்துகிறது.
- கடவுச்சொற்களையோ OTP -ஐயோ யாருடனும் பகிர வேண்டாம் என EPFO எச்சரித்துள்ளது.


மேலும் படிக்க | டிஏ ஹைக், டிஏ அரியர், ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் மெகா அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ