Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களில் இன்னும் சில நாட்களில் மாற்றம் செய்யப்படலாம். ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் திருத்துகிறது. 2024 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் இப்போது தீர்மானிக்க வேண்டும். செப்டம்பர் இறுதியில் இந்த கட்டணங்களை அரசாங்கம் முடிவு செய்து இதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும். சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தும் என நம்புகின்றனர்.
புதிய வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்
சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதங்களில் இதற்கு முன் ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில், பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund), சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme) மற்றும் அஞ்சலக நிலையான வைப்புத் திட்டம் (Post Office Fixed Deposit) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டியும் முன்பு போலவே தொடரப்பட்டன. இத்தகவலை நிதியமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்தது.
பொது வருங்கால வைப்பு நிதி
PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டாளர்கள் மிகவும் பிரபலமான இந்த சிறு சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் வட்டி விகித உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். PPF இன் வட்டி விகிதம் கடைசியாக 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் திருத்தப்பட்டது. அதன்பின் நான்கு ஆண்டுகளாக இது 7.1% என்ற அதே அளவில் உள்ளது. பல காலாண்டுகளாக இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை!
இந்த காலகட்டத்தில், மத்திய அரசு, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) அதிகரித்து 150 பிபிஎஸ் ஆக உயர்த்தியது. இந்த முறை அரசாங்கம் பிபிஎஃப் முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியை வழங்குமா? சொல்லப்போனால், அடுத்த காலாண்டில் PPF, SSY, FD, SCSS என அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் (Interest Rates) உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
PPF, SCSS, SSY மற்றும் பிற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இரண்டாம் நிலை சந்தையில் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் சந்தை ஈல்டுகளைப் பொறுத்தது. சிறுசேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதங்களை இங்கே காணலாம்.
சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதங்கள்
- சேமிப்பு கணக்கு - 4%
- 1 ஆண்டு கால நிலையான வைப்பு - 6.8%
- 2 ஆண்டு கால நிலையான வைப்பு - 6.9%
- 3 ஆண்டு கால நிலையான வைப்பு - 7%
- 5 ஆண்டு கால நிலையான வைப்பு - 7.5%
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் - 8.2%
- மாதாந்திர வருமான கணக்கு திட்டம் - 7.1%
- தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) - 7.7%
- சுகன்யா சம்ரித்தி திட்டம் - 8.2%
- பொது வருங்கால வைப்பு நிதி (PPF) - 7.1%
சமீபத்திய அப்டேட்
PPF, SSY மற்றும் NSC போன்ற பல திட்டங்கள் தொடர்பான விதிகளில் அரசு மாற்றங்களைச் செய்ய உள்ளது. இந்த வார தொடக்கத்தில், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை புதிய விதிகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த சிறுசேமிப்பு கணக்குகள் தொடர்பான வழிகாட்டுதல்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏதேனும் கணக்கு ஒழுங்கற்றதாகக் கண்டறியப்பட்டால், நிறுவப்பட்ட விதிக்கு இணங்க நிதி அமைச்சகத்தால் தேவையான முறைப்படுத்தலுக்கு இவை அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் கீழ், தேசிய சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குகளுக்கு ஆறு புதிய விதிகளை நிதி அமைச்சகம் (Finance Ministry) வெளியிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ