பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியினை அறிவித்திருக்கிறது, இப்போது இபிஎஃப்ஓ அதன் துறை விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.  இந்த புதிய மாற்றங்களின் மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இபிஎஃப் கணக்கிலிருந்து எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்தும் வசதியை இபிஎஃப்ஓ வழங்கியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை வாட்டிவதைத்த கொரோனா நோய் தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு பலரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இபிஎஃப்ஓ வழங்கியுள்ள இந்த வசதி மக்களுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும்.  பிஎஃப் கணக்கிலிருந்து எல்ஐசிக்கு பணம் எடுக்க, இபிஎஃப்ஓ-வின் புதிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும், இதற்கென மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு 


1) முதல் நிபந்தனை என்னவென்றால் இபிஎஃப்ஓ-வின் படிவம் 14-ஐ சமர்ப்பிக்க வேண்டும், இதனை செய்த பிறகு பாலிசி மற்றும் இபிஎஃப்ஓ கணக்கு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்த முடியும்.  


2) இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், நீங்கள் இபிஎஃப்ஓ-வின் படிவம் 14 ஐ நிரப்பும்போது, ​​உங்கள் கணக்கில் குறைந்தது இரண்டு மாத பிரீமியம் தொகை இருக்க வேண்டும். 


3) மூன்றாவது நிபந்தனை என்னவென்றால் இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எல்ஐசியின் பாலிசிக்காக மட்டுமே இந்த வசதியை வழங்கியுள்ளது. இந்த வசதி மற்ற நிறுவனங்களுக்கு இல்லை. 


கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எந்த பாலிசியிலும் இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.  இபிஎஃப்ஓ-வின் புதிய விதிகளின் கீழ் பணம் தேவைப்படும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கிலிருந்து  ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது, இதற்கு நீங்கள் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை.


மேலும் படிக்க | PF balance சரிபார்ப்பு: இபிஎஃப் இருப்பு அறிய படிப்படியான வழிகாட்டுதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ