EPFO Latest Update: அதிக ஊதியத்தில் ஓய்வூதியம்... காலக்கெடு நீட்டிக்கப்பட்டது, முக்கிய அப்டேட்
EPFO Update: தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை சமர்ப்பிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும் என முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் அவர்களது சங்கங்களிடமிருந்து பல கோரிக்கைகள் வந்தன.
EPFO Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் தொடர்பான விருப்பங்கள்/கூட்டு விருப்பங்களின் சரிபார்ப்புக்கான நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை செயலாக்கவும் பதிவேற்றவும் முதலாளிகள் / நிறுவனங்களுக்கு இறுதி நீட்டிப்பை வழங்கியுள்ளது. முன்னர் இருந்த காலக்கெடு மீண்டும் ஒரு முறை இப்போது நீட்டிக்கபட்டுள்ளது.
Ministry of Labour and Employment: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியது என்ன?
தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை சமர்ப்பிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும் என முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் அவர்களது சங்கங்களிடமிருந்து பல கோரிக்கைகள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Supreme Court: உச்ச நீதிமன்ற உத்தரவு
நவம்பர் 4, 2022 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் வசதி முதலில் பிப்ரவரி 26, 2023 அன்று தொடங்கப்பட்டது.
- முதலில் இதற்கான காலக்கெடு மே 3, 2023 வரை இருந்தது.
- முதன் முறையாக இந்த காலக்கெடு ஜூன் 26, 2023 வரை நீட்டிக்கப்பட்டது.
- தகுதியான ஓய்வூதியதாரர்கள் (Pensioners) மற்றும் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முழு நான்கு மாதங்கள் அனுமதி அளிக்கப்பட்டது.
- அதன் பிறகு இது மீண்டும் நீட்டிக்கப்பட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதிக் காலக்கெடு ஜூலை 11, 2023 ஆக நீண்டது.
- இந்த வகையில் மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
- இதன் விளைவாக, அந்தத் தேதிக்குள் EPFO மொத்தம் 17.49 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றது.
தேவையான ஊதிய விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கு பல நீட்டிப்புகள் இருந்த போதிலும், 3.1 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதை EPFO கவனித்தது. தேவையான ஊதியத் தரவைப் பதிவேற்றுவதில் முதலாளிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக காலக்கெடுவை நீட்டிக்க மேலும் கோரிக்கைகள் வந்தன. இதற்கு பல தரப்பிலுருந்து பல பிரதிநிதித்துரைகள் வந்தன.
இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, EPFO ஆனது, மீதமுள்ள விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கும் பதிவேற்றுவதற்கும் முதலாளிகளுக்கு / நிறுவனங்களுக்கு ஜனவரி 31, 2025 வரை இறுதிக் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிப்புக்கு கூடுதலாக, கூடுதல் தகவல் கோரப்பட்ட 4.66 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளில் புதுப்பிப்புகள் அல்லது தெளிவுபடுத்தல்களை வழங்குமாறும் முதலாளிகளை / நிறுவனங்களை EPFO கேட்டுக் கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, செயல்முறை சுமூகமாக முடிக்கப்படுவதை உறுதிசெய்ய, 2025 ஜனவரி 15க்குள் முதலாளிகள் / நிறுவனங்கள் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஃப்ஓ மூலம் செய்யப்பட்டுள்ள இந்த நீட்டிப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் அவர்களது கடமைகளை நிறைவேற்றி, ஓய்வூதிய சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களும் செயலாக்கப்பட்டு பதிவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கான இறுதி வாய்ப்பை முதலாளிகள் / நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ