சூப்பர் செய்தி!! குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிப்பது உறுதி: நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை

EPFO Update: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 18, 2024, 11:18 AM IST
  • இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சியை பாராட்டிய நாடாளுமன்ற நிலைக்குழு.
  • குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
  • EPFO ஓய்வூதியம் அதிகரிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
சூப்பர் செய்தி!! குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிப்பது உறுதி: நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை title=

EPS Pension: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் இதில் பெரிய அறிவிப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?

பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை தலைமையிலான குழு, நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ஒய்வூதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மைக்காக பரிசீலனை

"2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வாய்வழி சாட்சியங்களின் போது, ​​பல்வேறு பங்குதாரர்களால் குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளபடி, 2014 ஆம் ஆண்டை விட 2024 இல் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு அதிகரிப்பு மற்றும் பிற தொடர்புடைய காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை மேல்நோக்கித் திருத்துவது குறித்து பரிசீலிக்கும் அம்சத்தை தீவிரமாகப் பார்க்க வேண்டும் என குழு கருதுகிறது." என்று நாடாளுமன்ற நிலைக்குழு
கூறியுள்ளது.

"சம்பந்தப்பட்ட நிதி தாக்கங்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெரிய நலன் கருதி, ஒரு இணக்கமான தீர்வை எட்டுவதற்கு, அமைச்சகம்/EPFO இந்த முக்கியமான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று குழு விரும்புகிறது" என்று குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | புதுமண ஜோடிகளே... வாழ்க்கையில் பணப் பிரச்னை வராமல் இருக்க... இதை கண்டிப்பாக படிங்க!

2023-24 ஆம் ஆண்டில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) மொத்த எண்ணிக்கை 20,64,805 என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சியை பாராட்டிய நாடாளுமன்ற நிலைக்குழு

ஜனவரி 1, 2025 அன்று நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ள EPFO ​​இன் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையைப் பாராட்டிய குழு, "இந்த முயற்சியால் 80 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை ஒரு சில வங்கிகளிலிருந்து மட்டுமல்லாமல், எந்த வங்கியிலிருந்தும் எடுக்க முடியும்." என்று கூறியது. ஒரு வெளிப்படையான பொறிமுறையின் மூலம் க்ளெய்ம்களை விரைவாக செட்டில் செய்யவும், ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைகளை சரியான நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கும் EPFO ​​நடவடிக்கை எடுக்கவும் குழு பரிந்துரைத்தது.

Pensioners: EPFO ஓய்வூதியம் அதிகரிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

- ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரம் சிறக்கும்: ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் செலவுகளை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும்.
- நிதிப் பாதுகாப்பு: முதுமையில் நிதி பாதுகாப்பு கிடைக்கும்.
- சமநிலை: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களிடையே ஓய்வூதிய பலன்களில் உள்ள இடைவெளி குறையும்.
- சேமிப்பிற்கு ஊக்கம்: மக்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்: 18 மாத டிஏ அரியர் தொகை..... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News