EPFO Rules: பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர்கள் டெபாசிட் செய்யும் அதே அளவு தொகையை நிறுவனங்களும் செபாசிட் செய்கின்றன. இபிஎஃப் நிதியில் சேமிக்கப்படும் தொகை பணி ஓய்வுக்கு பிறகான முக்கிய நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக பிஎஃப் உறுப்பினர்கள் (PF Members) பணி ஓய்வுக்கு பின்னரே பிஎஃப் தொகையை எடுக்கிறார்கள். எனினும், பணியாளர்களுக்கு தேவைப்பட்டால், சில சிறப்பு சந்தர்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னரும் தொகையை எடுக்கலாம். பிஎஃப் கணக்கில் (PF Account) டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு நல்ல வட்டியும் கிடைக்கின்றது. 


ஒரு ஊழியர் நிறுவனத்தை மாற்றும்போது பிஎஃப் தொகையை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமானாலும், அல்லது தொகையை எடுக்க வேண்டுமானாலும், இவற்றுக்கான எளிய விதிகளை பின்பற்றி அதை செய்யலாம். இபிஎஃப் -இல் பல ஓய்வூதிய பலன்களும் உள்ளன. எனினும் இன்னும் சில இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இதன் சில விதிகள் பற்றி தெரியாத நிலை உள்ளது. அதில் உறுப்பினர்களுக்கு அதிக நன்மை அளிக்கக்கூடிய ஒரு விதியை பற்றி இங்கே காணலாம். 


பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO ​​விதி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான நிபந்தனைகள் என்ன? இதை எப்படி பூர்த்தி செய்வது. இது குறித்து இங்கே காணலாம். 


EPFO Loyalty-cum-Life Benefit என்றால் என்ன?


பிஎஃப் உறுப்பினர்கள் சில நிபந்தனைகளைப் பின்பற்றினால், 50 ஆயிரம் ரூபாய் போனஸ் நேரடியாக அவர்களது கணக்கில் வழங்கப்படும் என EPFO கூறுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) EPF சந்தாதாரர்களுக்கு வெகுமதி அளிக்க லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட் முறையை பரிந்துரைத்தது. இந்த விதியின் கீழ், ஊழியர்கள் ரூ. 50,000 வரை நேரடி பலனைப் பெறுகிறார்கள்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்.. ரயில்வே டூர் அப்டேட் இதோ


இதற்கான நிபந்தனைகள் என்ன


இரண்டு தசாப்தங்களுக்கு, அதாவது 20 வருடங்களுக்கு தொடர்ந்து தங்கள் பிஎஃப் கணக்குகளில் பங்களித்தும் அதன் மூலம் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டும் பிஎஃப் உறுப்பினர்களுக்கு இந்த போனஸின் பலன் கிடைக்கும். அதாவது, 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒரே பிஎஃப் கணக்கில் பங்களிப்புகளை டெபாசிட் செய்யும் சந்தாதாரர்கள், அதன் பலனைப் பெறுகிறார்கள். அதாவது 20 ஆண்டுகளாக வழக்கமான பங்களிப்புகளை செலுத்தி வரும் சந்தாதாரர்களுக்கு ரூ.50,000 கூடுதல் பலன் கிடைக்கும்.


இந்த பலனை பெற ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?


லாயல்டி கம் லைஃப் பலன்களை பெற, EPFO ​​சந்தாதாரர்கள் ஒரே EPF கணக்கில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். அதாவது, வேலை மாறிய பிறகும் அதே இபிஎஃப் கணக்கில் தொடர்ந்து பங்களிக்க பிஎஃப் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஒரே கணக்கில் 20 வருடங்கள் தொடர்ந்து பங்களித்த பிறகு, பணியாளர்களுக்கு லாயல்டி கம் லைஃப் பலன்கள் கிடைக்கும். எனினும், வேலையை மாற்றிய பிறகும் அதே EPF கணக்கைத் தொடரும் முடிவை முந்தைய மற்றும் தற்போதைய நிறுவனங்களுக்கு தெரிவிப்பது முக்கியம்.


எந்த பிஎஃப் உறுப்பினர்களுக்கு பலன் கிடைக்கும்?


லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ், 


- ரூ. 5,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுகிறார்கள். 
- ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு ரூ.40,000 கிடைக்கும்.
- அடிப்படை சம்பளம் ரூ.10,000க்கு மேல் இருந்தால், ரூ.50,000 பலன் கிடைக்கும்.
 
மேலும் படிக்க | உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ