அஞ்சலக FD கணக்கில் முதலீடு செய்துள்ளீர்களா? வெளியானது புதிய விதிகள்!
இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது
மற்ற நிதி நிறுவனங்களை காட்டிலும் அரசின் அஞ்சல் அலுவலகத்தில் எஃப்டியில் முதலீடு செய்வது பலவிதமான நன்மைகளையும், உங்கள் பணத்திற்கு பாதுகாப்பையும் தருகிறது. அஞ்சல் அலுவலகத்தின் எஃப்டியில் முதலீடு செய்வதன் முக்கியமான நன்மை என்னவென்றால் உங்களுக்கு வருமானத்துடன் அரசாங்க உத்தரவாதமும் கிடைக்கிறது மற்றும் இதில் காலாண்டு அடிப்படையில் வட்டியை பெற்றுக்கொள்ளலாம். ஒன்று, இரண்டு, மூன்று அல்லது 5 ஆண்டுகள் என உங்கள் விருப்பப்படி பல்வேறு பதவிக் காலங்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் எஃப்டியில் முதலீடு செய்துகொள்ளலாம், மேலும் இதில் முதலீடு செய்வதும் எளிதான ஒன்றாகும்.
இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் சிறப்பான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 1,000 மற்றும் அதிகபட்ச வரம்பு இல்லாமல் ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படும். 1 வருடத்திற்கு 5.50% வட்டி விகிதம், 2 வருடத்திற்கு 5.50% வட்டி விகிதம், 3 வருடத்திற்கு 5.50% வட்டி விகிதம், 5 வருடத்திற்கு 6.70% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நீங்கள் 5 வருட காலத்திற்கு அஞ்சல் அலுவலகத்தில் எஃப்டி கணக்கை திறந்தால், வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | Post office scheme: ரூ.12,000 முதலீட்டில் ரூ.1 கோடி வரை பெற அறிய வாய்ப்பு!
அஞ்சல் அலுவலகத்தின் எஃப்டி கணக்கில் ஒரு வயது வந்தவர், அதிகபட்சம் மூன்று பெரியவர்கள் (கூட்டு கணக்காக இருந்தால்), 10 வயதுக்கு மேற்பட்ட மைனர், மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபர்களுக்கு பாதுகாவலர் போன்ற யாரேனும் இந்த கணக்கை தொடங்கிக்கொள்ளலாம். சமீபத்தில் பல தனியார் வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி இருந்தது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? சமீபத்திய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ