புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு (Modi Government) பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான எல்.டி.சி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம். இது நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா காரணமாக எல்.டி.சி யைப் பயன்படுத்த முடியாத ஊழியர்களுக்கு எல்.டி.சி பண வவுச்சர் திட்டத்தின்  மூலம் பணமாக அதை பெற்றுக் கொள்ளலாம்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  (Nirmala Sitharaman) பொருளாதாரம் தொடர்பான பல திட்டங்களை அறிவித்தார். முதலில், பயணக் கொடுப்பனவு விடுமுறை திட்டத்திற்கான பண வவுச்சர் திட்டத்தை அவர்கள் அறிவித்தார். இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் பாக்கெடுகளுக்கு அதிக பணம் வரும் என்று நிதியமைச்சர் கூறினார். பணம் வைத்திருப்பவர் அதை செலவிடுகிறார். இந்த செலவு சமூகத்தின் பிற பிரிவினருக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் பயனளிக்கும் என்றார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 வருடத்திற்கு கிடைக்கும் கொடுப்பனவில் ஒரு முறை நாட்டின்  எந்தப் பகுதிக்கும் பயணம் செய்யலாம். ஒரு முறை தனது சொந்த ஊருக்கு செல்லலாம்


இந்த பயணக் கொடுப்பனவில் ஊழியர் விமானப் பயணம் மற்றும் ரயில் பயணச் செலவைப் பெறுகிறார். கூடுதலாக, ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறது.


கொரோனா காரணமாக இந்த எல்.டி.சி யைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஊழியர்களுக்கு பயணக் கொடுப்பனவு பணமாக கொடுக்கப்படும்.


ALSO READ | மக்கள் மன நிலையை மாற்றிய கொரோனா... ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி நகரும் மக்கள்..!!!


திட்டத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?


  • ஊழியர்களுக்கு எல்.டி.சி-க்கு பதிலாக பணம் வழங்கப்படுகிறது.

  • ஊழியர்களின் பதவிக்கு ஏற்ப பயண கட்டணம் பெற அனுப்பப்படுகிறது.

  • பயண கட்டணத்திற்கான கொடுப்பனவிற்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு

  • 2021 மார்ச் 31 க்கு முன் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • ஊழியர்கள் இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பெற செலவழிக்க வேண்டும்.

  • பயண கொடுப்பனவிற்கு மூன்று மடங்கு அதிகமான அளவிற்கு பொருள் அல்லது சேவையை வாங்க வேண்டும்.

  • 12% அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎஸ்டியை விதிக்கும் சேவை பொருட்களுக்கு பணம் செலவிடப்பட வேண்டும்.

  • ஜிஎஸ்டி (GST) பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் அல்லது வணிகரிடமிருந்து சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்

  • சேவைகள் அல்லது பொருட்களுக்கான கட்டணமும் டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட வேண்டும்.

  • பயண கொடுப்பனவு அல்லது விடுமுறை கொடுப்பனவு பெறும்போது ஜிஎஸ்டி ரசீது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


ALSO READ | வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இனி எங்கிருந்தும் ட்ரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G