வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இனி எங்கிருந்தும் ட்ரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்..!!

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை, தங்களது ஓட்டுநர் உரிமம் அதாவது ட்ரவிங் லைசன்ஸை புதுப்பிப்பதாகும்  

Written by - ZEE Bureau | Last Updated : Oct 11, 2020, 03:32 PM IST
  • உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியானால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
  • விசா மற்றும் சர்வதேச ஓட்டுநர் அனுமதிக்கான மருத்துவ சான்றிதழின் தொடர்பான விதிமுறைகளை நீக்குவதன் மூலம் இந்த செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
  • சான்றளிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் உள்ள குடிமக்களுக்கு, மற்றொரு மருத்துவ சான்றிதழ் தேவையில்லை.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இனி எங்கிருந்தும் ட்ரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்..!!

புதுடெல்லி(New Delhi): வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை, அதாவது ட்ரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பதைப்  பற்றி கவலைப்பட வேண்டாம். ஏன்னென்றால், உங்களுக்கான தீர்வு கிடைத்துது. வெளிநாட்டில் வசிக்கும் போது, அங்கிருந்தே இனி உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இப்போது எளிதாக புதுப்பிக்கலாம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் இப்போது இந்த செயல்முறையை எளிதாக்கப் போகிறது. சர்வதேச ஓட்டுநர் உரிமதிற்கான (International Driving Permit -IDP) விசா மற்றும் மருத்துவ சான்றிதழ் தொடர்பான விதிமுறைகளை நீக்குவதற்கான திட்டங்கள் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள், வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமம் காலாவதியானால், அதனை புதுப்பிக்க எந்தவிதமான ஏற்பாடுகளும் தற்போது இல்லை என்பதால், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்தகைய குடிமக்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் (IDP) காலாவதியாகும் போது புதுப்பித்தல் பணிகளை எளிதாக்குவதற்கான ஏற்பாடுகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செய்துள்ளது. மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989 இல் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தம் குறித்து அரசாங்கம் மக்களிடமிருந்து ஆலோசனை பெறுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரது சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியானால், புதுப்பிக்க எந்தவிதமான ஏற்பாடுகளும் தற்போது இல்லை என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்தகைய குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் (CMVR) 1989 ஐ திருத்துவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் வெளிநாடு வாழ் குடிமக்கள் வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விண்ணப்பிக்கலாம், அதன் பின்னர் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ (RTO) விற்கு அனுப்பப்படும்.

உங்கள் ஓட்டுநர் உரிமம்  காலாவதியானால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. விசா மற்றும் சர்வதேச ஓட்டுநர் அனுமதிக்கான மருத்துவ சான்றிதழின் தொடர்பான விதிமுறைகளை நீக்குவதன் மூலம் இந்த செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. 

சான்றளிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் உள்ள குடிமக்களுக்கு, மற்றொரு மருத்துவ சான்றிதழ் தேவையில்லை.

மேலும், விசா விதிகளும் நீக்கப்பட உள்ளன. ஏனென்றால், visa on arrival, அதாவது நாட்டிற்கு வந்த பிறகு விசா கொடுப்படுவது  இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயணம் செய்வதற்கு முன்னர் விசா கிடைப்பதில்லை, இதனால் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும்போது, விசா இருக்காது. 

இது தொடர்பாக அமைச்சு மக்களிடமிருந்து ஆலோசனை பெற உள்ளது. பரிந்துரைகளை, 30 நாட்களுக்குள் இணைச் செயலாளர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், (MVL, IT & Toll), நாடாளுமன்ற சாலை, புதுடெல்லிக்கு அனுப்பலாம்.

ALSO READ | மலிவான விலையில் தங்கத்தை வாங்கும் பொன்னான வாய்ப்பை வழங்கும் மத்திய அரசு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

More Stories

Trending News