மக்கள் மன நிலையை மாற்றிய கொரோனா... ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி நகரும் மக்கள்..!!!

தொற்று பரவல் மக்களின் ஷாப்பிங் மனநிலையை மாற்றி விட்டது. இந்த திருவிழா காலத்தில், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2020, 08:42 PM IST
  • தொற்று பரவல் மக்களின் ஷாப்பிங் மனநிலையை மாற்றி விட்டது.
  • இந்த திருவிழா காலத்தில், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
  • சென்னை முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 41 சதவீதத்தினர் இ-காமர்ஸ் தளங்களை பயன்படுத்துவதாக கூறினர்.
மக்கள் மன நிலையை மாற்றிய கொரோனா... ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கி நகரும் மக்கள்..!!! title=

தொற்று பரவல் மக்களின் ஷாப்பிங் மனநிலையை மாற்றி விட்டது. இந்த திருவிழா காலத்தில், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சமூக ஊடகங்களின் உதவியுடம் ஏற்கொள்ளப்பட்ட ஆய்வில் மக்கள், மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ்,  ஸ்மார்ட் போன்  போன்ற பலவகையான பொருட்களை வாங்க ஆன்லைனைத் தான் நம்பியுள்ளனர்.

சென்னை முழுவதும் நடத்தப்பட்ட  கருத்துக் கணிப்பில், 41 சதவீதத்தினர் இ-காமர்ஸ் தளங்களை பயன்படுத்துவதாக கூறினர். 29 சதவீதம் பேர் வீட்டிற்கு டெலிவரி செய்யும் உள்ளூர் சில்லறை கடைகளில் வாங்குகின்றனர்.

பண்டிகை ஷாப்பிங்கிற்காக மால்கள், சந்தைகள் மற்றும் உள்ளூர் சில்லறை விற்பனை கடைக்கு செல்வோம் என  16 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இனி எங்கிருந்தும் ட்ரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்..!!

நெரிசலான சந்தை பகுதிகளிக்கு செல்வதன் மூலம் தொற்று ஏற்படும் என அஞ்சுவதால், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக, அவர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே தேர்ந்தெடுக்கின்றனர். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனக்களில்,கொரோனா காலத்தில், விற்பனை மிக பெரிய அளவில், அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆமேசான், ப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள், வாக்காளர்களை கவர ஏற்கனவே, பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளனர். 

பல ஆண்டுகளாக இயங்கி வரும் பல சில்லறை விற்பனையாளர்களும் இணையவழி விற்பனை தளங்களில், ஆதாவது இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள முயன்று வருகின்றனர். ஏனெனில் பலர்  ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறியதன் காரணமாக அவர்களின் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது.

மேலும் படிக்க | Flipkart அழைக்கிறது: மாணவர்களுக்கான 45 நாள் Paid Internship திட்டம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News