Packaged Drinking Water: மினரல் வாட்டர் விற்பனை விதிகளை மாற்றியுள்ளது FSSAI
பேக்கேஜ் குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை விற்கும் எந்த உற்பத்தி நிறுவனங்களும் FSSAI உரிமத்திற்கு முன் BIS உரிமத்தைப் பெற வேண்டும். FSSAI வித்துள்ள இந்த உத்தரவு 1 ஏப்ரல் 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
Packaged Water New Rule: இனி BIS மார்க் சான்றிதழ் இல்லாத தண்ணீர் பாட்டில்கள் சந்தையில் விற்கப்படாது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) இதற்கான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
பேக்கேஜ் குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை விற்கும் எந்த உற்பத்தி நிறுவனங்களும் FSSAI உரிமத்திற்கு முன் BIS உரிமத்தைப் பெற வேண்டும். FSSAI வித்துள்ள இந்த உத்தரவு 1 ஏப்ரல் 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
2006 ஆண்டின் FSS சட்டத்தின் பிரிவு 31-ன் கீழ், நாட்டில் உணவு தொடர்பான எந்தவொரு வணிகத்தையும் தொடங்குவதற்கு முன்பு, உணவு வணிக ஆபரேட்டர்கள் (Food Business Operator-FBO) உரிமம் / பதிவு பெற வேண்டும். இப்போது இதில் ஒரு புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது, இனி BIS மார்க் (Bureau of Indian Standards) இல்லையென்றால், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர், மினரல் வாட்டர் ஆகியவற்றை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ விற்கவோ முடியாது.
ALSO READ | சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு
உற்பத்தியாளர்கள் FSSAI இடமிருந்து சான்றிதழ் பெற விரும்பினால் அல்லது அதில் பதிவு செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் BIS சான்றிதழைப் பெற வேண்டும். பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டருக்கான புதிய உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து உணவு வணிக ஆபரேட்டர்களும் முதலில் BIS உரிமத்தின் நகலை அல்லது அந்த கடிதத்தின் நகலை FoSCoS இன் ஆன்லைன் அமைப்பில் பெற வேண்டும் என்று FSSAI கூறியுள்ளது. இதில் BIS உரிம விண்ணப்பத்தைப் பதிவு செய்வது கூறப்பட்டுள்ளது
பல மினரல் வாட்டர் நிறுவனங்கள் FSSAI உடன் தொடர்புடையவை, பல நிறுவனங்கள் இணைந்தும் செயல்படுகின்றன, ஆனால் BIS சான்றிதழ் இல்லாமல் இவை இயங்குகின்றன. இனிமேல், FSSAI உரிமத்தைப் பெறுவதற்கு முன்பு BIS உரிமம் அல்லது விண்ணப்பத்தைக் காண்பிப்பது முதல் நிபந்தனை என்று FSSAI தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, முதலில் BIS உரிமம் பெற வேண்டும். அப்போதுதான் FSSAI உரிமத்தை பெற முடியும்.
உரிமம் புதுப்பிக்க BIS உரிமமும் கட்டாயம் தேவை, BIS உரிமத்தைக் காட்டாமல் நிறுவனங்களின் உரிமம் புதுப்பிக்கப்படாது. மேலும், BIS உரிமம் பெற்ற பின்னரே, உணவு வணிக ஆபரேட்டர்கள் ஆபரேட்டர்கள் ஆண்டிற்கான வருமானம் குறித்த தகவலை ஆன்லைனில் தாக்கல் செய்ய முடியும். FSSAI இன் இந்த உத்தரவுகள் 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
ALSO READ | Gold / Silver Rates Today: தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் இதோ
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR